Published:Updated:

``திருக்குறள் ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது!'' - ஆளுநர் ரவி பேச்சு

ஆளுநர் ரவி பேச்சு

``திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஆகச் சிறந்த புத்தகம். திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும்.'' - ஆளுநர் ஆர்.என்.ரவி

``திருக்குறள் ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது!'' - ஆளுநர் ரவி பேச்சு

``திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஆகச் சிறந்த புத்தகம். திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும்.'' - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published:Updated:
ஆளுநர் ரவி பேச்சு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், ``தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன், எனக்கு திருக்குறள் வழங்கப்பட்டது. அதன் பிறகு 12-க்கும் மேற்பட்ட புத்தகங்களின் உதவியோடு ஒவ்வொரு குறளின் முழு அர்த்தத்தையும் தெரிந்துவருகிறேன். திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். திருக்குறள் ஆன்மிகம், நீதி சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் குறித்துப் பேசுகிறது. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் அதை வெறும் வாழ்க்கை முறை நூலாக மட்டும் காட்டியிருக்கின்றனர்.

திருவள்ளுவர் உருவப்படம்
திருவள்ளுவர் உருவப்படம்

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஆகச் சிறந்த படைப்பு. நான் கூறுவதையோ, மற்றவர்கள் கூறுவதையோ நீங்கள் கேட்க வேண்டாம். நீங்களாக திருக்குறளைப் படித்து அதை முழுமையாக உணர்ந்துகொள்ளுங்கள். திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. திருக்குறளை அதன் முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அதைச் சரியாக மொழிபெயர்க்கவில்லை. அதை `Primal Deity' என எழுதியிருக்கிறார். திருக்குறளைச் சிலர் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர்'' என்றார்.