Published:Updated:

`ஒன்லி வெஜ் முதல் பயோ கழிவறை வரை!' - அரசுப் பேருந்துகளை பயணவழி உணவகங்களில் நிறுத்த புதிய நிபந்தனைகள்

பயணவழி உணவகம்

அரசுப் பேருந்துகளின் தொலைதூரப் பயணங்களின்போது வழியில் நிறுத்தப்படும் உணவகங்களில், சைவ உணவு மட்டுமே இடம்பெற வேண்டும், கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பலர், பயணத்தின்போது சாப்பிடுவதற்காக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில், உணவு, கழிப்பிட வசதி, விலை போன்றவற்றைக் குறித்துப் பல குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்படும் இது போன்ற உணவகங்களுக்கான புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நிபந்தனைகள்...

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து
  • உணவகங்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும்.

  • கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். மேலும் பயோ-கழிவறை இருக்க வேண்டும்.

  • உணவக வளாகத்தில் கட்டாயம் CCTV கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.

  • பேருந்தில் பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

  • உணவகத்தில் விற்கப்படும் உணவுப்பொருள்களின் விலைப்பட்டியல் பயணிகளுக்குத் தெளிவாகக் கண்ணில்படுபடி விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட வேண்டும். உணவுப்பொருள்களின் விலை, எம்.ஆர்.பி (MRP) விலையைவிட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

  • அனைத்து உணவகங்களிலும் கண்டிப்பாக புகார்ப்பெட்டி இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism