Published:Updated:

` சிகிச்சை அளிக்காவிட்டால் விபரீதம் நேரும்!' - அரசு மருத்துவமனைகளில் இனி `மனநல வியாழன்'

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

தமிழகத்தில் முதல்கட்டமாகப் புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் `மனநல வியாழன்' தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Mental health day
Mental health day

மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மாவட்ட மனநலத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும், மனநல மருத்துவர் தலைமையில் மனநலக்குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், மன நலப்பிரச்னைகள் குறித்த தவறான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை மக்கள் மனதிலிருந்து அகற்றி, அவர்களிடம் அறிவியல் பூர்வமான கருத்துகளை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் வகையில் தற்போது, `மனநல வியாழன்' என்ற திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாகப் புதுக்கோட்டையில் இதன் தொடக்க விழா நடைபெற்றுத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Minister vijayabhaskar
Minister vijayabhaskar

விழாவைத் தொடங்கிவைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ``மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், பெரிய விபரீதமே ஏற்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல மையத்தின் மூலம் தொடர்ந்து சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, மனநலச் சேவைகள் குறித்து பொதுமக்கள் அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே `மனநல வியாழன்' தொடங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவருக்கு சுயநினைவு வந்தவுடன் அவர்களின் குடும்பத்தினரிடம் அவர்களைக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியையும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்கிறது" என்றார்.

vijayabhaskar
vijayabhaskar

இதுபற்றி புதுக்கோட்டை மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வ நாயகம் கூறும்போது, ``ஒவ்வோர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவ்வாய்க்கிழமை மகப்பேறு மருத்துவத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

அன்றைய தினம் கர்ப்பிணிகளுக்கு நாம் கட்டாயம் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் பொதுவாகவே தோன்றிவிடும். அதுபோலத்தான் மனநலத்துக்கும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே, `மனநல வியாழன்' தொடங்கப்பட்டுள்ளது.

Inagural function
Inagural function

அன்றைய தினம் மன நலச் சேவைகளான மன அழுத்த மேலாண்மைப் பயிற்சி, மனநல மருத்துவ முகாம், மன நோய்க்கான மாத்திரைகள் வழங்குதல்,104 தொலைபேசி வழியாக மனநல சேவை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். இதன் மூலம் மனநல நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது" என்றார்.