Published:Updated:

``எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு உயர்வு; எலி பேஸ்ட் விற்பனைக்கு கட்டுப்பாடு!"- அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் சுப்பிரமணியன்

சாண பவுடர், எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் தொடங்கும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

``எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு உயர்வு; எலி பேஸ்ட் விற்பனைக்கு கட்டுப்பாடு!"- அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சாண பவுடர், எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் தொடங்கும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Published:Updated:
அமைச்சர் சுப்பிரமணியன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் ரூ.8.11 கோடி செலவில் 20 கிராமங்களில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்கள், திட்ட மருத்துவ பிரிவுக்கு ஐந்து கட்டிடங்கள் என 29 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

இவற்றின் திறப்பு விழா, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் மாணவர் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, ``தமிழ்நாட்டின் 36 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ராமநாதபுரம் கல்லூரியில் 150 மாணவர்கள் படிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. தற்போது 100 மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதே போல் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கும் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு ரூ.1,264 கோடியில் கட்டடம் கட்ட 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதோடு கட்டுமான பணி தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்கான திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டது. தற்போது ரூ.1,978 கோடியில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. கட்டடத்துக்கான வரைபடத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அந்த வரைபடம் ஒப்புதல் பெற்று, ஜப்பானைச் சேர்ந்த 'ஜெய்க்கா' என்ற நிறுவனத்திடமிருந்து 82 சதவிகிதம் அதாவது, மொத்த தொகையில் ரு.1,627 கோடியே 70 லட்சத்தை கடனாக மத்திய அரசு பெற்று தருகிறது. மீதம் 18 சதவிகித தொகையை மட்டும்தான் மத்திய அரசு நமக்கு வழங்குகிறது. இன்னும் ஆறு மாத காலத்துக்குள் பணிகள் தொடங்கும் என நம்புகிறோம்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுற்றுலா மையமான இராமேஸ்வரத்தில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி புதிய கட்டடம் கட்டுமான பணி 80 சதவிகிதம் முடிவடைந்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடைந்து அனைத்து உயர் சிகிச்சை பிரிவுகளும் செயல்பட தொடங்கும். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதால், பரமக்குடி அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதற்காக ரூ.53.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட ஊதியத்தினை உடனே வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம். இதில் தற்கொலைக்கு முயல்பவர்கள் பெரும்பாலானோர் சாண பவுடர், எலி பேஸ்ட்டை பயன்படுத்தி வருவது தெரியவந்திருக்கிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய இடம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய இடம்

எனவே இதை தடை செய்ய தொழில்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் இவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் இந்தப் பொருள்களைக் காட்சிப்படுத்தவோ, தனிநபராக வருபவர்களுக்கு விற்பனை செய்யவோ கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குட்கா பொருள்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதித்தாலும், பக்கத்து மாநிலங்களிலிருந்து காய்கறி வண்டிகளில் குட்காவை கடத்தி வரும் நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதனையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.