Published:Updated:

``கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து டெண்டர்; அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்” - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

`ஊட்டச்சத்து தொகுப்புக்கான ஒப்பந்தம் பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனத்துக்குத் தரப்பட்டிருக்கிறது' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

``கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து டெண்டர்; அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்” - மா.சுப்பிரமணியன்

`ஊட்டச்சத்து தொகுப்புக்கான ஒப்பந்தம் பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனத்துக்குத் தரப்பட்டிருக்கிறது' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக தி.மு.க அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார். இந்த நிலையில் அண்மையில், “அம்மா நியூட்ரீஷியன் கிட்டில் உள்ள ஹெல்த் மிக்ஸ் வாங்குவதில் தமிழ்நாடு அரசு 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறது'' என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து விவகாரத்தில் இன்று டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. தற்போது அனிதா டெக்ஸ்கார்ட் நிறுவனத்துக்கு டெண்டர் தரப்படாமல், ஸ்ரீ பாலாஜி சர்ஜிக்கல் என்ற நிறுவனம் டெண்டரைப் பெற்றிருக்கிறது. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் குறித்து அண்ணாமலை காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த விவகாரத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதுதான் நாகரிகமான அரசியலுக்கு அடையாளம். அப்படி அவர் வருத்தம் தெரிவிக்கவில்லையென்றால் துறைரீதியில், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவத்துறை என்பது மக்களின் உயிர்காக்கும் பொறுப்புள்ள ஒரு துறை. இந்தத் துறையில் குறைகள் இருந்தால் நிச்சயம் சுட்டிக்காட்டலாம். யார் சுட்டிக்காட்டுகிறார் என்பது பெரிய விஷயம் அல்ல. யார் சுட்டிக்காட்டினாலும் குறைகள் இருந்தால் நிச்சயமாகக் களையப்படும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism