Published:Updated:

`ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வித் ஏ.சி!' - கரூரில் தொடங்கப்பட்ட பேட்டரி பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால், குறைந்த தூரப் பயணப் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.விஜயபாஸ்கர்
எம்.விஜயபாஸ்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால், குறைந்த தூரப் பயணப் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை இன்று கரூரில் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, பேட்டரியில் இயங்கக்கூடிய நவீன வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்தில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயணம் மேற்கொண்டார்.

பேருந்துகளை அறிமுகம்செய்த எம்.விஜயபாஸ்கர்
பேருந்துகளை அறிமுகம்செய்த எம்.விஜயபாஸ்கர்

தமிழக போக்குவரத்துத் துறை பேருந்துகளை பொறுத்தமட்டில், அதிக தூரம் பயணிக்கக்கூடிய பேருந்துகளில் மட்டுமே குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இப்போது குறைந்த தூரம் பயணிக்கக்கூடிய பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் முதல் கட்டமாக, சென்னை முதல் திருவண்ணாமலை வரை இரண்டு பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பேருந்துகள் ஒரு முறை சார்ஜ் செய்தால், 40 கிலோ மீட்டர் வரை பயணிக்கக்கூடிய பேருந்துகளாகும். தற்பொழுது இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் 150 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதைப் பார்வையிட்டு, அதில் பயணம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``புதிதாக குறைந்த தூரம் பயணிக்கும் பேருந்துகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. 150 பேருந்துகள் தற்போது இயக்கப்பட இருக்கின்றன. கரூர் மண்டலத்தைப் பொறுத்தவரை, திருச்சி - கோவை - 1, கரூர் - கோவை- 2, திருச்சி - திருப்பூர் - 1, கரூர் - இராமேஸ்வரம், மதுரை வழி - 1, திருச்சி வழி - 2, கரூர் - திருச்சி - பாண்டிச்சேரி - 1 என மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இப்பேருந்துகள் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட, ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 கிலோ மீட்டர் வரை ஓடக்கூடிய பேருந்துகளாகும். இன்று கரூர் பஸ் பாடி நிறுவனத்தில் சில வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பேருந்தில் பயணிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பேருந்தில் பயணிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதனால், பொதுமக்கள் தனியார் பேருந்துகளைவிட, அரசு பேருந்துகளில் அதிகளவில் பயணம் செய்வார்கள். இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் முதல்கட்டமாக 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகங்களுக்குப் பயணச் செலவு என்பது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இடைநில்லா பேருந்துகள் (ஒன் டு ஒன் பேருந்து) மூலம் திருவண்ணாமலை முதல் சென்னை மற்றும் கரூர் முதல் கோவை வரையிலான பயண நேரத்தில் ஒரு மணி நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

`தமிழகத்தில் விரைவில் 820 மின்சாரப் பேருந்துகள்!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்