Published:Updated:

``சினிமா போலீஸைவிட தமிழ்நாடு போலீஸ் மோசம்..!" - அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை காட்டம்

ஐ.எஸ்.இன்பதுரை பங்கேற்ற அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

`கள்ளக்குறிச்சி பள்ளி, அ.தி.மு.க தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவங்களில், அங்கிருந்த தமிழ்நாடு காவல்துறையினர் சினிமாவில் வரும் போலீஸை விட மிகக் கேவலமாக நடந்துகொண்டனர்.' - ஐ.எஸ்.இன்பதுரை

``சினிமா போலீஸைவிட தமிழ்நாடு போலீஸ் மோசம்..!" - அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை காட்டம்

`கள்ளக்குறிச்சி பள்ளி, அ.தி.மு.க தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவங்களில், அங்கிருந்த தமிழ்நாடு காவல்துறையினர் சினிமாவில் வரும் போலீஸை விட மிகக் கேவலமாக நடந்துகொண்டனர்.' - ஐ.எஸ்.இன்பதுரை

Published:Updated:
ஐ.எஸ்.இன்பதுரை பங்கேற்ற அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன் மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பழைய சினிமாக்களில் போலீஸ் என்றாலே எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் வருவார்கள்... தமிழ்நாடு காவல்துறை அதைவிடவும் மிக மோசமாக நடந்துகொண்டது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி பள்ளிமீதான தாக்குதல் மற்றும் அ.தி.மு.க தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் போலீஸார் சம்பவ இடத்தில் இருந்தார்கள். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பில் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருப்பது பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்கள் அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என கடிதம் கொடுக்கவில்லை ’அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகம்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

வங்கி கணக்கு கூட, இந்தியன் வங்கி என்று குறிப்பிடாமல் ‘இந்தியா வங்கி’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் கடிதத்தில் தவறு இருக்கிறது. இது பற்றிய விஷயங்களை எங்களின் கட்சித் தலைவர்கள் முடிவெடுத்து உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்ற சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சட்டமன்ற கட்சி, நாடாளுமன்ற கட்சி, பொதுக்குழு, செயற்குழு ஆகியவைதான் முக்கியம். இதில் யார் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறார்களோ அவர்களிடம்தான் கட்சி இருக்கும்

ஆர்ப்பாட்டத்தில் பேசும் இன்பதுரை
ஆர்ப்பாட்டத்தில் பேசும் இன்பதுரை

அந்த வகையில், சட்டமன்றத்தில் 63 உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதனால் சட்டப்படி எம்.எல்.ஏ-களால் தேர்வானவரையே சபாநாயகர் அறிவிக்க வேண்டும். ஆனால் சபாநாயகருக்கு சட்டம் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆகவே அதிகாரிகளிடம் கேட்டு அவர் உரிய முடிவெடுப்பார்” என்று வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்தார்.