Published:Updated:

``வதந்திகளைப் பரப்ப வேண்டாம்; பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை!" - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

`` `தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது' என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது." - அமைச்சர் சிவசங்கர்

``வதந்திகளைப் பரப்ப வேண்டாம்; பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை!" - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

`` `தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது' என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது." - அமைச்சர் சிவசங்கர்

Published:Updated:
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழக அரசுப் பேருந்துகளில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், அதற்கான கட்டண உயர்வு அட்டவணை தயாராகிவிட்டதாகவும் இன்று காலை முதல் தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவி வந்தன. இந்த நிலையில், ``பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்" எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கமளித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தமிடும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படிதான் பர்மிட் வழங்கப்படும். கேரள, ஆந்திர மாநிலங்களில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் அந்தந்த மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, `தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது' என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.

அறிக்கை
அறிக்கை

போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் செயல்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும், பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். கடந்த ஓராண்டில் 112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், `கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது' என்ற தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism