Published:Updated:

`அழியும் மை; காரில் திருத்தம்; சினிமாவையே மிஞ்சுகிறது!’- டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் கொதித்த ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்
News
மு.க.ஸ்டாலின்

குரூப்-4 முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விவகாரம், க்ரைம் தொடர் போன்று நீண்டுகொண்டேபோகிறது. சிபிசிஐடி விசாரணையில் தினம் தினம் ஒவ்வொரு தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், கைது நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாக உள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய பிற தேர்வுகளில் இவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில், சில கோச்சிங் சென்டர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் உள்ளது. தனியொரு நபரால் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட முடியாது. இந்த முறைகேட்டில் பெரும் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கும் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு
குரூப் 4 தேர்வு முறைகேடு

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாகப் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சரான ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ இனிவரும் காலங்களில் 100 சதவிகிதம் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தேர்வுகள் நடத்துவதற்காக வழிமுறைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் தேர்வாணையம் செயல்பட உள்ளது. குற்றம் செய்தவர்கள் சிறுபுள்ளி, பெரும்புள்ளி, கறும்புள்ளி என யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கறுப்பு ஆடுகள். அவர்கள் களையெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கான தண்டனை நிச்சயம் வழங்கப்படும். தவறு செய்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். 16 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். ஒரு மையத்தில் நடந்த தவறுக்காக மற்றவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. அந்த மையத்தில் தேர்வெழுதிய 99 பேரின் தேர்வு முடிவுகளை ரத்துசெய்துவிட்டோம். தரவரிசைப் பட்டியலிலும் அதன்பின்னர் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, தரவரிசைப் பட்டியலில் தேர்வானவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்துவிட்டோம். ஒரு சென்டரில் நடந்த தவறுக்காக 6,000 சென்டர்களில் தேர்வெழுதியவர்களை மீண்டும் தேர்வெழுதக் கூறுவது நியாயமாக இருக்காது. இதுபோன்ற முறைகேடுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க பயிற்சி மையங்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து விரைவில் சட்டம் இயற்றப்படும்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில், குரூப்-4 முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற, துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய பிரதேசத்தில் நடந்த ‘வியாபம்’ ஊழலைவிட மோசமான மெகா தேர்வு ஊழலுக்கு’ டிஎன்பிஎஸ்சி-யில் பணிபுரியும் ஒரு ரெக்கார்டு கிளர்க் தான் காரணம் என்பது போல் திமிங்கிலங்களை விட்டுவிட்டும் மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சிசெய்கிறது. சீல் வைத்த வினாத்தாளுக்கு ரெக்கார்டு கிளர்க் மூலம் முறைகேடு செய்யமுடியும் என்றால், அதற்கு ஒரு தலைவர், செயலர், உறுப்பினர்கள் எல்லாம் எதற்கு? அழியும் மையில் தேர்வு எழுதினார்கள். காரில் வினாத்தாள்களைத் திருத்தினார்கள் என்பது, சினிமாவில் வரும் கற்பனைக் கதைகளை மிஞ்சும் வகையில் இருக்கிறது. குரூப் 4 தேர்வில் வெளிப்படைத் தன்மையாக லட்சக்கணக்கில் விலை பேசப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முறைகேடு செய்தி வந்து 25 நாள்கள் ஆகிவிட்டன. துறை அமைச்சரோ இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார். இத்தனை நாள்களாக அமைச்சர் எங்கே போயிருந்தார். ஏன் இவ்வளவு காலம் மௌனம் காத்தார். இப்போது ஏன் அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமார், விசாரணையைத் திசைதிருப்பும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். குரூப்-4 முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால், தி.மு.க இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.