Published:Updated:

``ராகுல் காந்தியின் யாத்திரையை திசைதிருப்பவே என்.ஐ.ஏ சோதனை" - கே‌.எஸ்.அழகிரி காட்டம்

கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடியும் ஒற்றுமை நடைப்பயணத்தில் 150 நாள்களில், 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ தொலைவைத் தொண்டர்களுடன் கடக்கத் திட்டமிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

``ராகுல் காந்தியின் யாத்திரையை திசைதிருப்பவே என்.ஐ.ஏ சோதனை" - கே‌.எஸ்.அழகிரி காட்டம்

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடியும் ஒற்றுமை நடைப்பயணத்தில் 150 நாள்களில், 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ தொலைவைத் தொண்டர்களுடன் கடக்கத் திட்டமிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் முடியும் இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் 150 நாள்களில், 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ தொலைவைத் தொண்டர்களுடன் கடக்கத் திட்டமிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

இந்த நிலையில், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிப்பாலம் பகுதிக்கு வருகை தரவிருக்கிறார். பின்னர், 6 கி.மீட்டர் தூரம் நடைப்பயணமாக வந்து கூடலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் இருக்கிறார். இதைத் தொடர்ந்து 30-ம் தேதி கர்நாடகாவுக்குச் சென்று நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூடலூரில் தங்கி மேற்கொண்டுவருகிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

செய்தியாளரிடம் பேசிய கே.எஸ்.அழகிரி , "ராகுல் காந்தி பாதயாத்திரை வெற்றிபெற்றிருக்கிறது. கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை மக்களிடமிருந்து திசைதிருப்பவே மத்திய அரசு என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. மேலும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் எதற்காக கைதுசெய்யப்பட்டார்கள் என இதுவரைக்கும் மத்திய அரசு விளக்கவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருக்கிறது" என்றார்.