Published:Updated:

``நாடு இன்று பாதுகாப்பானவர்களின் கையில் இருக்கிறது; கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!" - கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்

``நாடு இன்றைக்குப் பாதுகாப்பானவர்களின் கைகளில் இருக்கிறது. நாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை." - கங்கனா ரணாவத்

Published:Updated:

``நாடு இன்று பாதுகாப்பானவர்களின் கையில் இருக்கிறது; கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!" - கங்கனா ரணாவத்

``நாடு இன்றைக்குப் பாதுகாப்பானவர்களின் கைகளில் இருக்கிறது. நாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை." - கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்

பாலிவுட் சினிமா உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். சில நாள்களுக்கு முன்பு சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது தொடர்பான செய்திகள் பரவின. இந்த ஆண்டின் தொடக்கத்தில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து, மகாராஷ்டிர அரசு சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.

சல்மான் கான்
சல்மான் கான்

மேலும், சமீபத்திய டி.வி நிகழ்ச்சியொன்றில், ``பாதுகாப்பற்று இருப்பதைவிட பாதுகாப்புடன் இருப்பது மேல். எங்கு சென்றாலும் முழு பாதுகாப்புடன் செல்கிறேன். ஏராளமான துப்பாக்கிகள் என்னை வட்டமிடுகின்றன" என்று சல்மான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், அவ்வப்போது பா.ஜ.க சார்பு அரசியல் பேசுபவருமான கங்கனா ரணாவத், நாடு தற்போது பாதுகாப்பானவர்களின் கைகளில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

ஹரித்வாரில் நேற்று நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் சல்மான் கான் பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாகப் பேசிய கங்கனா ரணாவத், ``நாங்கள் நடிகர்கள். சல்மான் கானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமிருந்து அவர் பாதுகாப்பு பெற்றுவருகிறார். எனவே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதோடு எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது, எனக்கும் அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நாடு இன்றைக்குப் பாதுகாப்பானவர்களின் கைகளில் இருக்கிறது. நாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று கூறினார்.