Published:Updated:

``இந்தியா என்ன நினைக்கிறது என்பதை இந்த உலகமே எதிர்பார்க்கிறது" - டெல்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி

``எங்களின் எதிரிகளைக்கூட நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். இன்று இந்த உலகமே இந்தியா என்ன நினைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது." - மோடி

Published:Updated:

``இந்தியா என்ன நினைக்கிறது என்பதை இந்த உலகமே எதிர்பார்க்கிறது" - டெல்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி

``எங்களின் எதிரிகளைக்கூட நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். இன்று இந்த உலகமே இந்தியா என்ன நினைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது." - மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மூன்று நாடுகளிலுமே மோடிக்கு உற்சாக வரவேற்புகளும், உச்சபட்ச மரியாதைகளும் அளிக்கப்பட்டன. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், பிரதமர் மோடிக்கு `தி பாஸ்' என்று புகழாரம் சூட்டினார். இந்த நிலையில் மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிய மோடி, `இன்று இந்த உலகமே இந்தியா என்ன நினைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது' என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி

முன்னதாக இன்று காலை டெல்லியில் வந்திறங்கிய மோடியை, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உட்பட பலர் வரவேற்றனர். அதன் பிறகு 3 நாடுகளுடனான பயணம் குறித்து பேசிய மோடி, ``தடுப்பூசிகளை உலகுக்கு ஏன் கொடுத்தீர்கள் என என்னிடம் கேட்டார்கள். அவர்களிடம், இது புத்தர், காந்தியின் பூமி என்று நான் கூற விரும்புகிறேன். எங்களின் எதிரிகளைக்கூட நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்.

இன்று இந்த உலகமே இந்தியா என்ன நினைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது. நமது நாட்டின் கலாசாரம் பற்றிப் பேசும்போது, உலக நாடுகளின் பார்வையை நான் பார்க்கிறேன். நாட்டில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததாலேயே இந்த நம்பிக்கை வந்திருக்கிறது. அங்கு வந்திருந்தவர்கள் மோடியை நேசிப்பவர்கள் அல்ல, இந்தியாவை நேசிப்பவர்கள்" என்று கூறினார்.

மேலும், பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' புத்தகத்தின் டோக் பிசின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா குறித்துப் பேசிய மோடி, ``தமிழ் மொழி நம்முடைய மொழி. இது ஒவ்வோர் இந்தியனின் மொழி மற்றும் உலகின் பழைமையான மொழி" என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதைத் தொடர்ந்து மோடியைப் பாராட்டிய நட்டா, ``உங்களின் ஆட்சி முறையை இந்த உலகமே பாராட்டுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உங்களிடம் ஆட்டோகிராப் கேட்டார். உங்கள் தலைமையில் இந்தியாவை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை இது காட்டுகிறது. மேலும், பப்புவா நியூ கினியாவின் பிரதமர் உங்கள் பாதங்களைத் தொட்டவிதம், அங்கு உங்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது பிரதமருக்கு இப்படி வரவேற்பு அளிக்கப்படுவதைக் கண்டு இந்திய மக்கள் பெருமைகொள்கிறார்கள்" என்று கூறினார்.