Published:Updated:

"இங்கு சூழல் சரியில்லை; பிள்ளைகளிடம் வெளிநாட்டில் குடியுரிமை பெறச்சொல்லியிருக்கிறேன்"-ஆர்ஜேடி தலைவர்

ஆர்ஜேடி தலைவர் அப்துல் பாரி சித்திக் ( ட்விட்டர் )

``அரசியல் தலைவராக இங்கு அனுபவிக்கும் சலுகைகளை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். யாரும் அவரைத் தடுக்க மாட்டார்கள்.'' - பாஜக தலைவர்

பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) தேசிய பொதுச்செயலாளரான அப்துல் பாரி சித்திக், கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், "நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான, பாரபட்சமான சூழல் நிலவுகிறது. ஒரு தனிப்பட்ட உதாரணத்தை நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன். எனக்கு ஹார்வர்டில் படிக்கும் ஒரு மகனும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்ற ஒரு மகளும் இருக்கின்றனர். அவர்களிடம் வெளிநாட்டில் வேலைகளைத் தேடுங்கள். முடிந்தால், அங்கு குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறினேன்.

அப்துல் பாரி சித்திக்
அப்துல் பாரி சித்திக்
ட்விட்டர்

நான் இன்னும் இங்கேயே (இந்தியாவில்) வாழ்ந்துவருகிறேன். ஆனால், எதிர்காலத்தில் இங்கு வாழ்வதற்கான சூழல் இல்லை. உங்களால் சமாளிக்க முடியாது என்று அவர்களிடம் சொன்னேன்" எனப் பேசியதாகக் கூறப்படுகிறது . அவர் பேசியது தொடர்பாக பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், பீகாரின் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், "சித்திக் கருத்து இந்தியாவுக்கு எதிரானது. அவரால் இங்கு வாழ முடியவில்லையென்றால், அவர் அரசியல் தலைவராக இங்கு அனுபவிக்கும் சலுகைகளை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். யாரும் அவரைத் தடுக்க மாட்டார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.