Published:Updated:

ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்ற கேட்ட தமிழ்நாடு அரசு... சுங்கக் கட்டணங்களை உயர்த்திய மத்திய அரசு!

சுங்கச்சாவடி

தமிழ்நாடு அரசு, ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது.

ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்ற கேட்ட தமிழ்நாடு அரசு... சுங்கக் கட்டணங்களை உயர்த்திய மத்திய அரசு!

தமிழ்நாடு அரசு, ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது.

Published:Updated:
சுங்கச்சாவடி

கடந்த மார்ச் 16-ம் தேதி அன்று, டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து, தமிழக சாலைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மனு அளித்தார் தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. அந்த மனுவில், சென்னை புறநகர் பகுதிகளைச் சுற்றியுள்ள ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதே சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டுமெனப் போராட்டங்களை நடத்தியது. அப்போதே தி.மு.க எம்.பி-க்கள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து மனுவும் அளித்தனர்.

சுங்கச் சாவடிகள் -  தி.மு.க ஆர்ப்பாட்டம்
சுங்கச் சாவடிகள் - தி.மு.க ஆர்ப்பாட்டம்
Twitter/@Dayanidhi_Maran

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிறகு, இது குறித்துக் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ``தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்கச் சாவடிகளும், புறநகர்ப் பகுதிகளில் 9 சுங்கச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில், சென்னை புறநகர்ப் பகுதிக்குள் உள்ள சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், பரனூர், சூரப்பட்டு ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் முதலமைச்சர் ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறார்'' என்று கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்துதான் கடந்த மார்ச் 16-ம் தேதி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அகற்றக் கோரிய சுங்கச்சாவடிகள் சிலவற்றின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு அகற்றக் கோரிய ஐந்து சுங்கச்சாவடிகளில், வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளும் அடக்கம். தற்போது அந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்.

ஸ்டாலின் - எ.வ.வேலு
ஸ்டாலின் - எ.வ.வேலு

வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை மூடக் கோரி மனு அளித்து இரண்டு வாரங்கள்கூட ஆகாத நிலையில், அந்த சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியிருப்பது சலசலப்பையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியிருக்கிறது.