Published:Updated:

பழங்குடியின ஜனாதிபதி, சிறுபான்மையின துணை ஜனாதிபதி(?)... பாஜக-வின் நகர்வுகளும் மக்களின் புரிதலும்

திரௌபதி முர்மு, மோடி

``மாநிலங்களவையில் எனது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டாலும், எனது அரசியல் மற்றும் சமூகப் பயணம் முடியவில்லை.”- முக்தார் அப்பாஸ் நக்வி

பழங்குடியின ஜனாதிபதி, சிறுபான்மையின துணை ஜனாதிபதி(?)... பாஜக-வின் நகர்வுகளும் மக்களின் புரிதலும்

``மாநிலங்களவையில் எனது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டாலும், எனது அரசியல் மற்றும் சமூகப் பயணம் முடியவில்லை.”- முக்தார் அப்பாஸ் நக்வி

Published:Updated:
திரௌபதி முர்மு, மோடி

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், முக்தார் அப்பாஸ் நக்வி. இவர், 2016-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட, முக்தார் அப்பாஸ் நக்விக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் மத்திய அமைச்சர் பதவியில் தொடர முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து மத்திய சிறுபான்மையினர் நலத் துறைஅமைச்சர் பதவியிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி விலகியிருக்கிறார். இதற்கு முன்னதாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம்வகித்தார். இதேபோல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.

முக்தார் அப்பாஸ் நக்வி
முக்தார் அப்பாஸ் நக்வி

தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களைவ் சந்தித்த முக்தார் அப்பாஸ் நக்வி “மாநிலங்களவையில் எனது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டாலும், எனது அரசியல் மற்றும் சமூகப் பயணம் முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அந்தப் பதவிக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19-ம் தேதி கடைசி நாள். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. “இப்போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் முக்தார் அப்பாஸ் நக்வி குடியரசு துணைத் தலைவர் ஆவது உறுதியாகியிருக்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். முகமது நபிகள் குறித்து, பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்து விவகாரத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக பின்னடைவை எதிர்கொண்டு ரும் நிலையில், இந்த முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நரேந்திர மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
நரேந்திர மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

இதற்கு முன்பு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிமுகமான பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கப்பட்டதில் பா.ஜ.க-வுக்கு அரசியல் ஆதாயம் இருக்கிறது என்கிற விமர்சனம் எழாமல் இல்லை. மயூர்பஞ்ச் மாவட்ட எல்லை, ஜார்க்கண்டையும் மேற்கு வங்கத்தையும் ஒட்டியிருக்கிறது. அந்தப் பகுதியில் முர்முவின் சாந்தல் பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அந்த மக்களிடமும், நாட்டிலுள்ள பழங்குடியின மக்களின் ஓட்டுகளை வேட்டையாட முயல்கிறது பாஜக என்பதுதான் எதிர்த் தரப்பி்னரின் குற்றச்சாட்டு. ``அடித்தட்டு மக்களை, விளிம்புநிலை மக்களை கரம் தூக்கிவிடும் அரசியல்வாதியை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்” என்பது பா.ஜ.க-வினரின் வாதம்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “பா.ஜ.க-வினர் உள்ளாட்சித் தேர்தலிலிருந்து சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரை வென்றவர்கள். எனவே, மக்கள் உணர்வு அவர்களுக்குத் தெரியும். ஒரு மாநிலத்திலிருந்து பஞ்சாயத்துத் தேர்தல் நடத்திவந்தவர்கள். அதனால் மக்கள் மனதைக் கவரக்கூடிய அளவுக்கு, வாக்குவங்கியை உயர்த்தக்கூடிய அளவுக்கு அவர்கள் நடவடிக்கை இருக்கும். அந்த வகையில் முன்னேறிய வகுப்பினர், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி இந்த நான்கு பிரிவிலும் இந்துக்கள் மத்தியில் மோடிக்கு வாக்குவங்கி உயர்ந்திருக்கிறது. அடுத்து இஸ்லாமியர் மத்தியில் இருக்கும் எதிர்ப்புணர்வைத் தணிக்கக்கூடிய வேலைகளைப் பார்ப்பார்கள்” என்றார்.