திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் மொத்தம் 1,579 வாக்காளர்கள் உள்ளன. இதில், 1,057 வாக்குகள் பதிவாகி உள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி சினேகா (22 வயது). இந்த வார்டில் சுயேச்சை வேட்பாளராக கள்மிறங்கினார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி சினேகா 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அம்மா மக்கள் முன்னேற்றத்தைச் சேர்ந்த சிவக்குமார் 191 வாக்குகள் பெற்றார். அவரைத் தவிர மற்ற 7 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
