Published:Updated:

`சால்ட் முந்திரி’ முதல் `சைக்கிளில் பதவியேற்க வந்த கவுன்சிலர்’ வரை! - திருச்சி பதவியேற்பு காட்சிகள்

சைக்கிளில் பதவியேற்க வந்த கவுன்சிலர் சுரேஷ்

மொறுமொறுப்பான சால்ட் முந்திரி, பால்கோவாவைச் சுவைத்துவிட்டு கவுன்சிலர்கள் உற்சாகமாக பதவியேற்றுக்கொண்டனர்.

`சால்ட் முந்திரி’ முதல் `சைக்கிளில் பதவியேற்க வந்த கவுன்சிலர்’ வரை! - திருச்சி பதவியேற்பு காட்சிகள்

மொறுமொறுப்பான சால்ட் முந்திரி, பால்கோவாவைச் சுவைத்துவிட்டு கவுன்சிலர்கள் உற்சாகமாக பதவியேற்றுக்கொண்டனர்.

Published:Updated:
சைக்கிளில் பதவியேற்க வந்த கவுன்சிலர் சுரேஷ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் தி.மு.க 49 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 5 வார்டுகள், ம.தி.மு.க 2 வார்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டிலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 59 வார்டுகளில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க., 3 வார்டுகளிலும், அ.ம.மு.க., ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். திருச்சி மாநகராட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 65 வார்டு கவுன்சிலர்களும், திருச்சி மாநகராட்சி அலுவலகத்திலுள்ள ஏ.எஸ்.ஜி லூர்துசாமி மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அரங்கிலிருந்த கவுன்சிலர்களுக்கு வறுத்த சால்ட் முந்திரி, பால்கோவா, டீ கொடுக்கப்பட்டது.

பதவியேற்கக் காத்திருந்த கவுன்சிலர்கள்
பதவியேற்கக் காத்திருந்த கவுன்சிலர்கள்

இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பதவியேற்புவிழா கூட்ட அரங்கினுள் ஒவ்வொரு கவுன்சிலருடனும் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் பதவியேற்கும்போது `கடவுள் அறிய’ அல்லது `உளமார உறுதி கூறுகிறேன்...’ எனச் சொல்வதுதான் வழக்கம். ஆனால், திருச்சி மேயர் வேட்பாளர் எனச் சொல்லப்படும் அன்பழகன் முதல் தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பெயரைச் சொல்லி பதவியேற்றுக்கொண்டனர்.

அதேவேளையில், 65-வது வார்டில் வெற்றிபெற்ற அ.தி.மு.க கவுன்சிலர் அம்பிகாபதி, `அ.தி.மு.க-வின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆசிபெற்ற, புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய ஆசியுடனும், கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ், மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் வெல்லமண்டி நடராஜன், தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் ஆகியோர் ஆசியுடனும், 65-வது வார்டு மக்களின் ஆசியுடனும் பதவியேற்றுக்கொள்கிறேன்’ என லென்த்தாக பதவிப் பிரமாணம் ஏற்று கிறுகிறுக்கவைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதவியேற்கக் காத்திருந்த கவுன்சிலர்கள்
பதவியேற்கக் காத்திருந்த கவுன்சிலர்கள்

பதவியேற்பு விழா முடிந்த பின்னர் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் அவர்களுடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘நாலாயிரம் ஓட்டு பெற்ற நாகராஜ்’ என 25-வது வார்டு கவுன்சிலர் நாகராஜனை அவரது ஆதரவாளர்கள் அழைக்க அவரோ, ‘3-வது முறையா கவுன்சிலர் ஆகியிருக்கேன். முன்னாடியெல்லாம் ஒவ்வொண்ணுக்கும் போராடணும். இப்ப எங்க அமைச்சர்கிட்ட சொல்லி எல்லாப் பிரச்னையையும் சரிசெஞ்சுடலாம்’ என்றார்.

23-வது வார்டில் வெற்றிபெற்ற சி.பி.ஐ கவுன்சிலர் சுரேஷ் சைக்கிளிலேயே பதவியேற்க வந்தார். பதவியேற்று முடித்ததும் சைக்கிளிலேயே வீட்டுக்குக் கிளம்பினார். `இந்த சைக்கிள் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?’ என நாம் கேள்வியெழுப்ப, `பதவியேற்புக்குன்னு இல்லைங்க... அதுக்கு முன்னாடியே நான் தினசரி நடந்தும், சைக்கிள்ல போயும் மக்கள் குறைகளை கேட்டுக்கிட்டு இருந்தேன். அதை இப்போதும் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்கேன். இதன் மூலமாக மக்கள் என்னை எளிதாக அணுக முடியும்’ என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பதவிப் பிரமாணம்
பதவிப் பிரமாணம்

சென்னை, தஞ்சாவூருக்கு அடுத்து திருச்சி மாநகராட்சியில் ஒரே ஒரு கவுன்சிலரைப் பிடித்த 47-வது வார்டு அ.ம.மு.க கவுன்சிலர் செந்தில்நாதனோ, ``மக்கள் செல்வன், எங்கள் அண்ணன் டி.டி.வி.தினகரன் இதேமாதிரி ஒத்த ஆளாத்தான் சட்டமன்றத்துக்கு உள்ள போனாரு. அதே எண்ணத்தோடதான் நானும் உள்ள போனேன்” எனச் சொல்ல, `சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என அவருடைய ஆதரவாளர்கள் கைதட்டலைப் பறக்கவிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism