Published:Updated:

குடும்பச் சொத்துகள் ஏலம்! - கவலைப்படாமல் இடைத்தேர்தல் பணியாற்றும் கே.என்.நேரு

கே.என். நேரு
கே.என். நேரு

 வங்கிக் கடனை கட்டத் தவறியதால், முன்னாள் அமைச்சர் நேரு குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. அதைப்பற்றி கவலைப்படாமல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி,கண்டோன்மென்ட் இந்தியன் வங்கிக் கிளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாளிதழ்களில் அசையா சொத்து விற்பனை அறிவிப்பு எனும் பெயரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2002-ம் ஆண்டு கடனீட்டு சொத்துகளை விளக்கமளித்தல், நிதி சொத்துகளை சீரமைத்தல் மற்றும் தனது சொத்து மீதான உரிமை அமலாக்க விதிகள்குறித்த மின்னணு அறிவிப்பு என்றுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் கே.என்.நேரு
தேர்தல் பிரச்சாரத்தில் கே.என்.நேரு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தந்தை பெயரில், அவரது தம்பிகளான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் மகன் அருண் நேரு, மறைந்த ராமஜெயத்தின் மகன் வினித் நந்தன் உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.வி.ராமன் சாலையில் ஜி.நாராயணன் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான திருச்சி, மணிகண்டத்தை அடுத்த தாயனூர் கிராமத்துக்கு உட்பட்ட நிலங்கள் மற்றும் திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியிலுள்ள நிலங்கள் என சுமார் 80 ஏக்கர் 4897 சென்ட் நிலத்தில் உள்ள 4,94,838 சதுர அடியில் இருக்கும் கட்டடங்கள் உள்ளிட்டவைமீது, சுமார் 109 கோடியே 74 லட்சத்து 89 ஆயிரத்தி 438 ரூபாய் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கடனை கட்டச்சொல்லியும், கட்டாத நிலையில் சொத்தை ஜப்தி செய்யக் கடந்த 2017 நவம்பர் மாதம் 15-ம் தேதி அறிவிப்பு அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. கடனை அவர் திருப்பிச் செலுத்தாததால், நிலங்களைக் கடந்த வருடம் மார்ச் 16-ம் தேதி சுவாதீனம் எடுத்ததாகக் கூறியுள்ள திருச்சி கண்டோன்மென்ட் இந்தியன் வங்கிக் கிளை, தொடர்ந்து கட்டவேண்டிய தொகையை திருப்பிச் செலுத்தாத காரணந்தால், வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, மேற்படி நிலங்களை அடையாளம் எடுத்துக்கொண்டார் என்று கூறியிருக்கிறது.

தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தார் அறக்கட்டளை பெயரில் வாங்கிய தொகையை வட்டிச் செலவு மற்றும் கட்டணங்களுடன் வசூலிப்பதற்காக, அந்த நிலத்தையும், அதில் உள்ள கட்டடங்களையும் அப்படியே விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

தி.மு.க vs பா.ம.க மோதலாக மாறியிருக்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம்!

இந்தச் சொத்துகளின் தற்போதைய விலை ரூ.115.93 கோடி என்றும் அந்தச் சொத்துகளை ஏலம் எடுக்க விரும்புபவர்கள், வரும் நவம்பர் 11-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் மின்னணு ஏலம் மூலம் எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan

வங்கிக் கடனுக்காகத் தங்கள் குடும்பச் சொத்துகள் வங்கியால் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல், கே.என்.நேரு விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளருக்காக ஆதரவாளர்களுடன் களமிறங்கி தேர்தல் பணியாற்றிவருகிறார். இது, திருச்சி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு