Published:Updated:

திருச்சியில் `பொன்னி' ஐ.நா: அனல் பறந்த விவாதங்கள்… தூதர்களாக மாறிய கல்லூரி மாணவர்கள்!

திருச்சியில் `பொன்னி' ஐ.நா

ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு, அகில இந்திய அரசியல் கட்சிக் கூட்டம், சர்வதேச செய்தியாளர் சந்திப்பு என நான்கு கமிட்டிகள் இடம்பெற்றிருந்தன.

உலக அமைதியைப் பேணுவதை மையமாகக்கொண்டு செயல்பட்டு, நாடுகளுக்கிடையே நட்புறவுகளை வைத்துக்கொள்ள ஒத்துழைக்கும் மிகப்பெரிய பன்னாட்டு அமைப்பு ஐக்கிய நாடுகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

பொதுவாக, ஐ.நா சபைக் கூட்டங்களில் ஒரு நாட்டின் தூதர், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அல்லது பிரதிநிதி பங்கெடுத்துக்கொண்டு, சர்வதேச வாதத்துக்கு உட்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பது வழக்கம்.

திருச்சியில் `பொன்னி' ஐ.நா: அனல் பறந்த விவாதங்கள்… தூதர்களாக மாறிய கல்லூரி மாணவர்கள்!

ஆனால், மாதிரி ஐ.நா சபை (Model United Nations) தொகுத்து, அதில் தென்னிந்தியக் கல்லூரி மாணவர்களைப் பல்வேறு நாடுகளுக்குத் தூதர்களாகச் செயல்படவைத்து , உலகச் சிக்கல்களை விவாதிக்க வைத்தால்... அப்படி ஒரு சம்பவம் நடந்தது திருச்சியில்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, தென்னிந்தியாவின் முக்கியமான கல்லூரிகளிலிருந்து மாணவர்களை ஒருங்கிணைத்து, மாதிரி ஐ.நா சபையை அக்டோபர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தொகுத்து வழங்கியிருக்கிறது.

திருச்சியில் `பொன்னி' ஐ.நா: அனல் பறந்த விவாதங்கள்… தூதர்களாக மாறிய கல்லூரி மாணவர்கள்!

`பொன்னி’ ஐ.நா என்ற பெயரோடு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாதிரி ஐ.நா சபையின் பெயர்க் காரணம் பற்றிக் கேட்டபோது, `பொன்னி நதி எப்படி தென் மாநிலங்களை இணைக்கிறதோ, அதுபோல் இந்தக் கூட்டமைப்பு, தென்னிந்திய மாணவர்களை இணைப்பதாகவும், பொன்னி நதி பாயும் திருச்சி மாநகரில் இது நிகழ்வதுமே இந்தப் பெயருக்குக் காரணம்’ என்கிறார் பிஷப் ஹீபர் கல்லூரி மாதிரி ஐ.நா-வின் பொதுச்செயலாளராகச் செயல்படும் அஃப்ரா முகம்மது ரபீக்.

ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு, அகில இந்திய அரசியல் கட்சிக் கூட்டம், சர்வதேச செய்தியாளர் சந்திப்பு என்ற நான்கு கமிட்டிகள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்த கமிட்டிகளில் அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம் (Non proliferation Treaty) மீதான ஆய்வு, காலநிலை மாற்ற நடவடிக்கையில் இணக்கத்தின் முக்கியத்துவம், குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசியப் பதிவேடு ஆகிய தலைப்புகளில் வாதங்கள் தூள்கிளப்பின. தத்தம் நாட்டின் கோட்பாடுகளுக்கு உட்பட்டும், அந்த நாட்டின் ராஜ தந்திரங்களை (Diplomacy) கருத்தில் கொண்டும், இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

திருச்சியில் `பொன்னி' ஐ.நா: அனல் பறந்த விவாதங்கள்… தூதர்களாக மாறிய கல்லூரி மாணவர்கள்!

ஆயுதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஸ்பான்சர் செய்த வரைவுத் தீர்மானமும், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் நார்வே, பின்லாந்து நாடுகளின் தீர்மானமும் அதிக வாக்குகள் பெற்று தேர்வுசெய்யப்பட்டன.

அகில இந்திய அரசியல் கட்சிக் கூட்டம் பொதுவான ஐ,நா கூட்டத்துக்கு சற்றே மாறுபட்ட கமிட்டி. இதில் மாணவர்கள் இந்திய அரசியல்வாதிகளாக மாறி, இந்திய அரசியலுக்கு உட்பட்ட சிக்கல்களை விவாதிப்பார்கள். நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் அனைத்தும் இங்கும் நடைபெறும்.

திருச்சியில் `பொன்னி' ஐ.நா: அனல் பறந்த விவாதங்கள்… தூதர்களாக மாறிய கல்லூரி மாணவர்கள்!

உலக நிகழ்வுகளை ஒவ்வொரு நாட்டின் வாயிலாக விவாதிப்பது, அதுவும் ஐநா-வின் பாணியில் நடத்துவது, அன்றாட விவாதப் போட்டிகளுக்கும் சற்றே மாறுபட்டு இருக்கிறது. மாணவர்களை 9-5 வேலைகளுக்குத் தயார்ப்படுத்துவதைத் தாண்டி, தற்போது நடக்கும் போர்ச் சூழலில் மாணவர்களை உலக நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளவைப்பது அவசியமாகிறது!