Published:Updated:

காளி போஸ்டர் விவகாரம்: மஹுவா மொய்த்ரா கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்!

மஹுவா மொய்த்ரா

"காளி என்னைப் பொறுத்தவரை இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்." - மஹுவா மொய்த்ரா

காளி போஸ்டர் விவகாரம்: மஹுவா மொய்த்ரா கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்!

"காளி என்னைப் பொறுத்தவரை இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்." - மஹுவா மொய்த்ரா

Published:Updated:
மஹுவா மொய்த்ரா

பல ஆவணப்படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது `காளி’ என்ற டெலி ஃபிலிம் இயக்கியிருக்கிறார். அதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் LGBTQ+ சமூகத்தின் பிரைட் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது. இதற்கு, பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், லீனா மணிமேகலையைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

`காளி’ பட போஸ்டர்
`காளி’ பட போஸ்டர்

இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்ட் 2022-ன் 2-வது நாளில் பேசினார். அப்போது அவர், ``காளி என்னைப் பொறுத்தவரை இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். உங்கள் தெய்வத்தை கற்பனை செய்ய உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. சில இடங்களில் கடவுள்களுக்கு மது வழங்கப்படும், வேறு சில இடங்களில் அது தெய்வ நிந்தனையாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் சிக்கிம் சென்றால் அங்கே காளி தேவிக்கு மதுவைப் பிரசாதமாகக் கொடுப்பதைக் காண்பீர்கள். ஆனால் நீங்கள் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று மது பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் அவர்கள் அதை நிந்தனை என்று முகம் சுளிப்பார்கள். எனவே உங்கள் தெய்வத்துக்கு நீங்கள்தான் எல்லாம்” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மஹுவா மொய்த்ரா-வின் கருத்துக்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், எம்.பி மஹுவா மொய்த்ரா-வுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது போன்ற கருத்துகளை திரிணாமுல் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறது.

அண்டர் தி டென்ட்
அண்டர் தி டென்ட்
ட்விட்டர்

மேலும், காளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை வெளியிட்ட கனடாவின் ஆகா கான் அருங்காட்சியகம் இந்த போஸ்டரை வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அண்டர் தி டென்ட்' படத்தின் 18 சிறு ஆவணப்படங்களில் ஒன்றான `காளி’ படத்தின் போஸ்டர் இந்து மற்றும் பிற மத சமூகங்களின் உறுப்பினர்களைப் புண்படுத்தியதற்கு அருங்காட்சியகம் வருந்துகிறது.

இந்த நிகழ்ச்சி டொரொன்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆகா கான் அருங்காட்சியகத்தில், கலைகளின் மூலம் கலாசார புரிதல் மற்றும் உரையாடலை வளர்ப்பதற்கான நோக்கத்தின் பின்னணியில் நடத்தப்பட்டது. எனவே, பல்வேறு மத வெளிப்பாடுகள், நம்பிக்கைகளுக்கு மரியாதை செலுத்துவது இந்தப் பணியின் ஒரு பகுதி என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.