Published:Updated:

`முதலில் நான் டாக்டர்’... 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்!

அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர் மாணிக் சஹா

திரிபுராவின் முதலமைச்சரும், டாக்டருமான மாணிக் சஹா, 10 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

திரிபுரா-வின் 11-வது முதல்வராக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற டாக்டர் மாணிக் சஹா, `முதலில் நான் டாக்டர். பிறகுதான் முதல்வர்' என 10 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்திருக்கிறார்.

அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர் மாணிக் சஹா
அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர் மாணிக் சஹா

முதல்வரான பிறகு தன்னுடைய மருத்துவப் பணியிலிருந்து சற்று விலகியிருக்கும் மாணிக் சஹா, ஹபானியா நகரிலுள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே டாக்டராகப் பணியாற்றியவர். இந்த நிலையில் 10 வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அகற்றுவதற்காக மீண்டும் டாக்டரானார் முதல்வர் மாணிக் சஹா.

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக முன்பு பணியாற்றிய திரிபுரா மருத்துவக் கல்லூரி ஆபரேஷன் தியேட்டருக்குள் நேற்று காலை 9 மணியளவில் நுழைந்த மாணிக் சஹா, 9:30 மணியளவில் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு சிரித்த முகத்தோடு வெளியில் வந்தார். இந்த அறுவை சிகிச்சையின்போது மாணிக் சஹாவுக்கு உதவிகரமாக, பல் அறுவை சிகிச்சை, முக அறுவை சிகிச்சை மருத்துவர்களான டாக்டர் அமித் லால் கோஸ்வாமி, டாக்டர் பூஜா தேப்நாத், டாக்டர் ருத்ர பிரசாத் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தனர்.

அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர் மாணிக் சஹா
அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர் மாணிக் சஹா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக் சஹா, ``அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நலமாக இருக்கிறான். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு அறுவை செய்தேன். ஆனாலும், சிரமமாக இல்லை" என்று தெரிவித்தார்.

மாணிக் சஹாவின் இந்தச் செயல், தான் கற்றுக்கொண்டது பிறருக்கு உதவும் எனில், வாழ்வின் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அதை மீண்டும் செய்ய வேண்டும் என்பதைப் பலருக்கும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.