Published:Updated:

திருவனந்தபுரம்: `காணாமல்போன 17 ஃபைல்கள்’ - சி.பி.எம் இளம்பெண் மேயரைச் சுற்றும் சர்ச்சைகள்!

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்

பணிகள் அனைத்தையும் ஆளும் சி.பி.எம் கட்சியினருக்கு மட்டுமே வழங்குவதாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில் ஃபைல்கள் வடிவில் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: `காணாமல்போன 17 ஃபைல்கள்’ - சி.பி.எம் இளம்பெண் மேயரைச் சுற்றும் சர்ச்சைகள்!

பணிகள் அனைத்தையும் ஆளும் சி.பி.எம் கட்சியினருக்கு மட்டுமே வழங்குவதாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில் ஃபைல்கள் வடிவில் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் இருக்கிறார். நாட்டின் இளம் வயது மேயர் என்ற புகழைப்பெற்ற ஆர்யா ராஜேந்திரன் 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 28-ம் தேதி திருவனந்தபுரம் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் மாநகராட்சி தற்காலிகப் பணியிடங்களை நிரப்ப சி.பி.எம் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பனிடம் பட்டியல் கேட்டு கடிதம் அனுப்பியதாக ஆர்யா ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பணிகள் அனைத்தையும் ஆளும் சி.பி.எம் கட்சியினருக்கு மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்யா ராஜேந்திரனை ராஜினாமா செய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில் ஃபைல்கள் வடிவில் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகங்களிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 ஃபைல்கள் காணாமல்போனதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மேயர் ஆர்யா ராஜேந்திரன்
சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மேயர் ஆர்யா ராஜேந்திரன்

திருவனந்தபுரம் மாநகராட்சியிலிருந்து மிகவும் முக்கியமான மூன்று ஃபைல்கள் காணாமல்போயிருப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து மியூசியம் போலீஸார் கடந்த மாதம் ரகசிய விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் ஏழு முக்கிய துறை சார்ந்த அலுவலகங்களிலும், 25 அரசு அலுவலகங்களிலும், 11 சோனல் அலுவலகங்களிலும் ஃபைல்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை உள்ள ஃபைல்களை அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். அதில் 9 ஃபைல்கள் மாநகராட்சி மெயின் அலுவலகத்திலிருந்தும், ஸ்ரீகாரியத்திலுள்ள சோனல் அலுவலகத்திலிருந்து 5 ஃபைல்கள் உட்பட மொத்தம் 17 பைல்கள் காணாமல்போயிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே பணி நியமன விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடும் எதிர்க்கட்சிகள், இப்போது ஃபைல் காணாமல்போன பிரச்னைக்கும் சேர்த்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. சட்டசபைக் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் பணி நியமனத்துக்குக் கட்சி நிர்வாகிகள் பட்டியல் கேட்ட விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் நேற்று கிளப்பினார். இனி எட்டு நாள்கள் நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தில் மாநகராட்சி ஃபைல்கள் காணாமல்போன விவகாரத்தைக் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.