Published:Updated:

``அவரைக் காப்பாற்றவே முயல்கிறோம்” - கல்லூரி மாணவி கைது சர்ச்சை குறித்து அஸ்ஸாம் முதல்வர்

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா

``அவர் எங்களின் மகள்.. அவளைக் காப்பாற்ற முயல்கிறோம்.. இன்னும் அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவள் தேர்வு எழுதட்டும், நேர்காணலுக்கு வரட்டும்." - அஸ்ஸாம் முதல்வர்

``அவரைக் காப்பாற்றவே முயல்கிறோம்” - கல்லூரி மாணவி கைது சர்ச்சை குறித்து அஸ்ஸாம் முதல்வர்

``அவர் எங்களின் மகள்.. அவளைக் காப்பாற்ற முயல்கிறோம்.. இன்னும் அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவள் தேர்வு எழுதட்டும், நேர்காணலுக்கு வரட்டும்." - அஸ்ஸாம் முதல்வர்

Published:Updated:
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா

அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்திப் பகுதியைச் சேர்ந்த பர்ஷாஸ்ரீ (19) என்ற மாணவி கல்லூரியில் கணிதம் இரண்டாமாண்டு இளங்கலை படித்துவருகிறார். இவர் 'தேசத்துக்கு எதிராக மீண்டும் கிளர்ச்சி செய்வோம்' என்ற தலைப்பில் கவிதை எழுதி அதை முகநூலில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக மே 18 -ம் தேதி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அஸ்ஸாம் அரசு, அந்த மாணவி 1990-ம் ஆண்டில் பயங்கரவாத அமைப்பாகக் கருதி இந்திய அரசு தடை செய்த உல்ஃபா (ஐ) என்ற அமைப்பில் சேர விரும்பியதற்காகக் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது.

பர்ஷாஸ்ரீ
பர்ஷாஸ்ரீ
ட்விட்டர்

இந்த நிலையில், மாணவியின் கைது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தக் கைது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ சிபாமோனி போரா செய்தியாளர்களிடம், "சட்டம் ஆளுக்கு ஏற்றாற்போல மாறுமா என்ன... தடை செய்யப்பட்ட உல்ஃபா அமைப்பிடம் அமைச்சர் சஞ்சோய் கிஷன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டாரே... பாடகர் ஜூபீன் கார்க் CAA இயற்றப்பட்டால் உல்ஃபாவில் சேருவேன் என்று கூறியிருந்தாரே... அவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``கல்லூரி மாணவியின் கைது பாசிசத்தின் விளைவு. ஒரு கவிதை எழுதியதற்காக மாணவி கைதுசெய்யப்பட்டிருப்பது, ஜனநாயகம் இல்லை என்பதைக் காட்டுகிறது. அஸ்ஸாமில் யதேச்சதிகாரம் மட்டுமே நடக்கிறது" என்று ராஜ்யசபா எம்.பி அஜித் குமார் புயான் விமர்சித்திருக்கிறார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா

இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, "அந்த மாணவி தேச விரோதக் கவிதை எழுதினார் என்பதற்காகக் கைதுசெய்யப்படவில்லை. அவர் உல்ஃபா-வில் சேர விரும்புவதாகக் கூறியதால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் உல்ஃபா-வில் சேரச் சென்றால், அவர் ஒரு மனித வெடிகுண்டாகத் திரும்பி வந்து சாதாரண மக்களைக் கொன்றுவிடுவார். அவரிடம் பேச ஆட்களை அனுப்பியிருக்கிறேன். அவர் உல்ஃபாவில் சேர மாட்டார் என்று அவருடைய பெற்றோரோ அல்லது யாரோ ஒருவரோ பொறுப்பேற்றால், அவர் விடுவிக்கப்படுவார்.

அவர் எங்களின் மகள்.. அவரைக் காப்பாற்ற முயல்கிறோம். இன்னும் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் தேர்வு எழுதட்டும், நேர்காணலுக்கு வரட்டும். இதுவரை உல்ஃபாவில் 42 இளைஞர்கள் சேர்ந்து பலியாகியுள்ளனர். உல்ஃபாவில் யாராவது அவருக்கு மரண தண்டனை கொடுத்தால் என்ன நடக்கும்... அதனால்தான் அவர் குறித்து ஆலோசனை நடந்துவருகிறது, ஆனால் சில அறிவுஜீவிகள் இதற்கு வேறு வண்ணங்களைக் கொடுக்க முயல்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.