Published:Updated:

``காழ்ப்புணர்ச்சியால் சொல்லவில்லை; இது அவர்களுக்குத் தற்காலிக வெற்றிதான்'' - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

``இந்த ஸ்டேஜில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று ரவுண்டுகள் போகும். பொறுத்திருந்து பார்ப்போம்.'' - டி.டி.வி.தினகரன்

Published:Updated:

``காழ்ப்புணர்ச்சியால் சொல்லவில்லை; இது அவர்களுக்குத் தற்காலிக வெற்றிதான்'' - டி.டி.வி.தினகரன்

``இந்த ஸ்டேஜில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று ரவுண்டுகள் போகும். பொறுத்திருந்து பார்ப்போம்.'' - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில், திருச்சியிலுள்ள தனியார் ஹோட்டலில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``இது ஒரு லீகல் பேட்டில் (Legal Battle). இந்த ஸ்டேஜில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றிருக்கிறார். முதல் ரவுண்டில் ஓ.பி.எஸ் ஜெயித்தார். இரண்டு, மூன்றில் எடப்பாடி ஜெயித்திருக்கிறார். இன்னும் இரண்டு, மூன்று ரவுண்டுகள் போகும். பொறுத்திருந்து பார்ப்போம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலைச் சின்னம் கொடுக்கப்பட்டாலும் அது சோபிக்காது. இன்னும் பலவீனமடையத்தான் செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் கிடைத்த பணபலம், மமதையால் எடப்பாடி தன்னைத் தலைவராக அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

பொதுக்குழுவையும் அவர்கள் வசப்படுத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி காலம் இவர்களுக்குத் தீர்ப்புச் சொல்லும். வருங்காலத்தில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால்தான் தி.மு.க என்கிற தீய சக்தியை வீழ்த்த முடியும். இரட்டை இலை கிடைத்ததால், ஈரோடு கிழக்கில் எடப்பாடி வெற்றி பெற்றிட முடியுமா என்ன... ஏற்கெனவே இரட்டை இலைச் சின்னத்தோடு ஆட்சி அதிகாரம், பணபலம் போன்றவற்றை வைத்துக்கொண்டு 2021 தேர்தலில் அவர்கள் போட்டியிட்டபோது கூட, அவர்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லையே.

உயர் நீதிமன்றம் - ஓபிஎஸ் - இபிஎஸ் - அதிமுக
உயர் நீதிமன்றம் - ஓபிஎஸ் - இபிஎஸ் - அதிமுக

இதுவொரு தற்காலிகமான வெற்றி அவர்களுக்கு அவ்வளவுதான். உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி நாம் விமர்சனம் செய்யக் கூடாது. ஏனென்றால், நீதிமன்றங்கள்தான் மனிதனின் கடைசி நம்பிக்கை. தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று சொல்லியிருந்தாலும் கூட, தீர்மானங்களை நாங்க எதும் டீல் பண்ணவில்லை என்றும், தேர்தல் ஆணையத்திலும் முறையிடலாம் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

மற்றபடி இதன் பின்னணியில் யாரும் இருப்பதாய் நான் நினைக்கவில்லை. இந்தத் தீர்ப்பினால் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு 5,000 ஓட்டுகள் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது அவ்வளவுதான். மற்றபடி வெற்றிவாய்ப்பெல்லாம் கிடைக்காது. காழ்ப்புணர்ச்சியால் நான் இதைச் சொல்லவில்லை. ஈரோட்டில் இருக்கும் நிலைமையை எங்களுடைய கட்சிக்காரர்கள் சொல்வதை வைத்துச் சொல்றேன். ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரு கட்சிகளும் அடிக்கின்ற கூத்துகளைப் பார்த்தால் தேர்தலைத் தள்ளித்தான் போட வேண்டும். தி.மு.க ஈரோடு கிழக்குத் தேர்தல்ல தப்பிச்சிக்கும். ஆனா, நாடாளுமன்றத் தேர்தல்ல பலத்த அடிவாங்கும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், " `விஸ்வரூபம்’ படம் வெளியானபோது அம்மாவுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் நிறுவனம் சார்பாக ஒரு பக்க விளம்பரத்தைக் கொடுத்து, ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தது. அது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருவது அனைவரும் அறிந்தது. இன்றைக்கு அவர் ஓர் அணியில் இருக்கிறார், நாடாளுமன்றத்தில் ஒரு சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக அந்த அணிக்குச் சாதகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆக, சிறந்த அரசியல்வாதியாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. 2017 ஏப்ரலிலிருந்து டெல்லிதான் அ.தி.மு.க-வை இயக்குகிறது. அது உண்மைதான்.
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற அணியில் அ.ம.மு.க பங்குபெறும். ஓர் அணிலைப் போல பிரதமரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய பணியில் நாங்கள் செயல்படுவோம்.

அதற்கு வாய்ப்பிலை என்றால், தனியாக நிற்பதற்கு அ.ம.மு.க தயாராக இருக்கிறது. கவர்னர் கவர்னராகச் செயல்பட்டால்தான் நல்லது. அவர் ஏதோ சனாதன தர்மத்தைப் பேசுவது, பொதுவுடைமைத் தத்துவங்களைக் குறைவாகப் பேசுவதெல்லாம் அவருக்கும் கவர்னர் பதவிக்கும் அழகல்ல" என்றார்.