Election bannerElection banner
Published:Updated:

ஒவைசியுடன் டி.டி.வி.தினகரன் கூட்டணிப் பேச்சுவார்த்தை?! - அ.ம.மு.க நேர்காணல் அப்டேட்

அ.ம.மு.க நேர்காணல்
அ.ம.மு.க நேர்காணல்

மண்டலவாரியாக நேர்காணல் நடக்கும் ஹாலுக்கு அழைக்கப்பட்டு, தொகுதிவாரியாக விருப்ப மனு அளித்தவர்களின் பெயர் சொல்லி அழைக்கப்படுகிறது. அனைவரும் எழுந்த பின் அவர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் உரையாற்றுகிறார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.ம.மு.க வேட்பாளர் நேர்காணல், தற்போது சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்துவருகிறது. இன்றும் நாளையும் நேர்காணல் நடத்தப்பட்டு, வரும் புதன்கிழமை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருக்கிறார்.

அ.ம.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் மார்ச் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் சார்பில் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் தேதி ஏப்ரல் 6-ம் தேதி என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், 7-ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 4,500 பேருக்கு மேல் விருப்ப மனு அளித்திருந்தனர்.

அ.ம.மு.க நேர்காணல்
அ.ம.மு.க நேர்காணல்

அவர்களில் சென்னை முதல் கடலூர் வரை 54 (கட்சி) மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்று வேட்பாளர் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மண்டலவாரியாக நேர்காணல் நடந்துவருகிறது. நாளை, மதுரை மாவட்டம் முதல் காஞ்சிபுரம் மாவட்டம் வரை 39 (கட்சி) மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறவிருக்கிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் விண்ணபித்திருப்பதால் நாளை கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, நேர்காணலில் டி.டி.வி.தினகரன்- உடன், அந்தக் கட்சியின் து.தலைவர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள், ரெங்கசாமி, பழனியப்பன், செந்தமிழன், அரூர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

சசிகலா முடிவு; பா.ஜ.க பகை...  கறார் காட்டிய அ.தி.மு.க! - திரிசங்கு நிலையில் தினகரன்

மண்டலவாரியாக நேர்காணல் நடக்கும் ஹாலுக்கு அழைக்கப்பட்டு, தொகுதிவாரியாக விருப்ப மனு அளித்தவர்களின் பெயர்கள் சொல்லி அழைக்கப்படுகின்றன. அனைவரும் எழுந்த பின் அவர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் உரையாற்றுகிறார்

``ஒவ்வொரு தொகுதியிலயும் முப்பது, நாற்பது பேர் கட்டியிருக்கீங்க... ஆனா, யாராவது ஒருத்தருக்குத்தான் சீட் கொடுக்க முடியும். சீட் கொடுக்குற ஆளுக்கு எல்லோரும் ஒற்றுமையா வேலை செய்யுங்க... எல்லோருக்குமான அங்கீகாரம் நிச்சயம் உண்டு'' என்று தினகரன் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவைசி
ஒவைசி

மேலும், எஸ்.டி.பி.ஐ., ஏ.ஐ.எம்.ஐ எம் (ஒவைசி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் அ.ம.மு.க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு