Published:Updated:

``தோல்விகளை திசை திருப்ப ராசாவை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாரோ ஸ்டாலின்?”- டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

``தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ?'' - டிடிவி தினகரன்

``தோல்விகளை திசை திருப்ப ராசாவை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாரோ ஸ்டாலின்?”- டிடிவி தினகரன்

``தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ?'' - டிடிவி தினகரன்

Published:Updated:
டிடிவி தினகரன்

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா அண்மையில் நாமக்கல்லில் நடந்த விழா ஒன்றில் `` `நீ கிறித்தவனாக இல்லையென்றால், நீ இஸ்லாமியனாக இல்லையென்றால், நீ பாரசீகனாக இல்லையென்றால், நீ இந்துவாகத்தான் இருக்கவேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது" எனக் குறிப்பிட்டு மேலும் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது அவரின் பேச்சை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது, `` இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.'' என பதிவிட்டுள்ளார்.