ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ஜி ஸ்கொயர்' ஜூனியர் விகடனுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்திருக்கிறது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் 'ஜி ஸ்கொயர்' நிறுவனத்தின் புகாரை ஜூனியர் விகடன் முற்றிலுமாக மறுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விகடன் வழக்கறிஞர் விரிவாக விளக்கமளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் விகடனின் பெயருக்கு அவப்பெயர் விளைவிக்கும்விதமாக இந்தச் செயல் அமைந்திருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஜி ஸ்கொயர் (G Square) பிரச்னையில் பத்திரிகை நிறுவனத்தின் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் அவசர அவசரமாக குற்ற வழக்கு பதிவுசெய்திருப்பது கண்டனத்துக்குரியது. தவறாகச் செய்தி வெளியிடப்பட்டதாகக் கருதினால் நீதிமன்றத்துக்குச் சென்று சட்டப்படியான நிவாரணம் தேடுவதுதான் சரியாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதை விட்டுவிட்டு அதிகாரம் கையிலிருக்கிறது என்பதற்காக காவல்துறையை ஏவிவிட்டு பத்திரிகை நிறுவனத்தைச் சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், பெண்கள் மீதெல்லாம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்வதென்பது அப்பட்டமான அத்துமீறல். அதிகாரம் தரும் போதை நீண்ட நாள் நிலைக்காது என்பதை தி.மு.க-வினர் உணர வேண்டும்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.