Published:Updated:

``ஸ்டாலின் கவுன்சிலர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்!'' - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

``தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கம் வராமல் தவிப்பதாக பொதுக்குழுவில் பேசினார். அம்மா இருந்திருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா?'' - டிடிவி தினகரன்

``ஸ்டாலின் கவுன்சிலர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்!'' - டிடிவி தினகரன்

``தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கம் வராமல் தவிப்பதாக பொதுக்குழுவில் பேசினார். அம்மா இருந்திருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா?'' - டிடிவி தினகரன்

Published:Updated:
டிடிவி தினகரன்

தி.மு.க அரசைக் கண்டித்து அ.ம.மு.க சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டக் கூட்டத்தில் அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய டி.டி.வி.தினகரன், ``திமுக ஒரு தீய சக்தி என்று புரட்சித்தலைவர் அன்று கூறினார். ஆனால் 50 ஆண்டுகள் கழித்தும் தி.மு.க-வின் செயல்பாடுகள் அதே மாதிரிதான் தொடர்ந்து வருகின்றன. `சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம், சொல்லாததையும் செய்வோம்' என தமிழிலே வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். தி.மு.க-வினர் தமிழை பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள், தற்போது தி.மு.க-வினர் புதிதாக மதத்தை எல்லாம் கையில் எடுத்திருக்கின்றனர். விருந்தோம்பலுக்கு பேர் போனவர்கள் தமிழர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால், முறைகேடுகளால், ஊழல் குற்றச்சாட்டுகளால், அவருடைய திருவிளையாடல்களால் அவரைச் சார்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் திருவிளையாடல்களால் மக்கள் கோபம் கொண்டு தி.மு.க-வுக்கு வாக்களித்தனர். தி.மு.க-வினர் திருந்தியிருப்பார்கள் என்று மக்கள் எண்ணி அவர்களுக்கு வாக்களித்தனர், ஆனால் அவர்கள் `நாங்கள் திருந்தவே இல்லை' என்று பிரதானப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பத்து ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் இல்லை. எப்படியாவது தனது நீண்ட நாள் கனவான முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகின்ற விதமாக வாக்குறுதிகளைக் கொடுத்தார். தற்போது அவர் தள்ளாடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தூக்கம் வராமல் தவிப்பதாக பொதுக்குழுவில் பேசினார். அம்மா இருந்திருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா? பொழுது விடிந்தால் அமைச்சராக இருப்போமா என்று தெரியாது.

ஸ்டாலின் உருக்கம்
ஸ்டாலின் உருக்கம்

சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஏதாவது அத்துமீறலில் ஈடுபட்டால் அடுத்த நாள் காலையில் அவர்களுடைய பதவி பறிபோய்விடும். ஆனால் அதற்காக அப்போது ஊடகங்கள் அம்மாவை குற்றம்சாட்டின. அம்மா சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என்று விமர்சனமும் செய்தன. அம்மா ஒரு இயற்கையான தலைவர். அவர் உருவாக்கப்பட்ட தலைவர் அல்ல, வாரிசு தலைவர் அல்ல, வாரிசாக அறிவிக்கப்பட்ட தலைவர் அல்ல. தி.மு.க-வில் திணிக்கப்பட்ட தலைமை இருப்பதால்தான் அமைச்சர்களையும், கவுன்சிலர்களையும்கூட கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதனால்தான் முதலமைச்சர் இன்று பொதுவெளியில் புலம்புவதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அமைச்சர்களால் எனக்கு தூக்கம் இல்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் அம்மா அவர்களால் அமைச்சர்களுக்கு தூக்கம் இல்லாமல் இருந்தது. அம்மா ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்தவர்களுக்கும், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் தூக்கம் இல்லாமல் இருந்தது. செந்தில் பாலாஜியை நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சிறையில் அடைப்போம் என்று 2016-ல் ஸ்டாலின் கூறினார். தற்போது அவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியிருக்கிறார். ஆனால் இன்று செந்தில் பாலாஜியால்தான் தி.மு.க-வில் பிரச்னையே ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க அமைச்சர்கள் அமைச்சர்களை போலவா நடந்து கொள்கிறார்கள்? துரைமுருகன் ஜமீன்தாரை போல பேசுகிறார். பொன்முடி தெலுங்கு பட வில்லனை போல பேசி வருகிறார்" என்றார்.