Published:Updated:

``ஓ.பி.எஸ் சொல்லியதுதான் எங்கள் கருத்தும்" - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் ( தே.சிலம்பரசன் )

``இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி பற்றிய முடிவை அமமுக எடுக்கும்." - டிடிவி தினகரன்

``ஓ.பி.எஸ் சொல்லியதுதான் எங்கள் கருத்தும்" - டிடிவி தினகரன்

``இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி பற்றிய முடிவை அமமுக எடுக்கும்." - டிடிவி தினகரன்

Published:Updated:
டிடிவி தினகரன் ( தே.சிலம்பரசன் )

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையேயான பதவிச் சண்டையால்... அதிமுக யாருக்கு என இன்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று நான் சொல்லிக்கொள்ள விரும்புவது... 'எம்.ஜி.ஆர்., அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, வரும் நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்தத் தேர்தல் ஆனாலும் சரி! அதில், 'தீய சக்தி' என எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ஓரணியில் திரண்டு வீழ்த்திக் காட்டுவோம். 

டிடிவி தினகரன் பேட்டி - கோட்டக்குப்பம்
டிடிவி தினகரன் பேட்டி - கோட்டக்குப்பம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் வர உள்ளதையொட்டி, எங்களின் கட்சியைப் பலப்படுத்தவும், பூத் கமிட்டிகளை அமைக்கவும் தமிழ்நாடு முழுவதும் எங்களின் நிர்வாகிகள் பணியில் இறங்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி பற்றிய முடிவை அமமுக எடுக்கும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார், அதுதான் எங்களின் கருத்தும். தமிழ்நாடு ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஓர் ஆளுநரே செயல்படுவது வேலியே பயிரை மேய்வதாக இருக்கிறது. 

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு என்பதை 'தமிழகம் எனச் சொல்ல வேண்டும்' என ஓர் ஆளுநரே தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் வருத்தம் அளிக்கும் விதமாக அவர் பேசி வருகிறார். மத்திய அரசுக்கு, தமிழ்நாட்டில் கெட்ட பெயர் வரும் வகையில் செயல்படுகிறார். 

ஓபிஎஸ் - இபிஎஸ் - ஸ்டாலின்
ஓபிஎஸ் - இபிஎஸ் - ஸ்டாலின்

அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அமமுக-வின் கோரிக்கை. தேர்தல் கூட்டணியைப் பற்றி வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் முடிவு செய்வோம்" என்றார்.