Published:Updated:

``அதிமுக முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!” - டி.டி.வி.தினகரன் சொல்வதென்ன?

டி.டி.வி.தினகரன்

``கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக-வும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

``அதிமுக முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!” - டி.டி.வி.தினகரன் சொல்வதென்ன?

``கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக-வும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
டி.டி.வி.தினகரன்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக செயலாளர் சையது கான் தலைமை தாங்கினார். தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுக-வில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக-வும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த அதிமுக-வின் முடிவு வந்த பிறகுதான், எனது முடிவை அமமுக தொண்டர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்.

அமமுக-வின் தொண்டர்களே எஜமானர்கள். என்னால் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை. அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதுதான் அமமுக-வின் லட்சியம். சுயபரிசோதனை செய்யவேண்டிய இடத்தில் அதிமுக-வினர்தான் உள்ளனர். அதன் விளைவாகத்தான் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து போரிட நான் முழுமூச்சுடன் போராடுவேன்'' என்றார்.