Published:Updated:

`முத்தலாக் விவகாரத்தில் இரட்டைத் தலைமையின் முரண்பாடு வெளிப்படுகிறது!'-டி.டி.வி.தினகரன்

செ.சல்மான் பாரிஸ்
வி.சதிஷ்குமார்

``பெரியாறு அணையின் நீர் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்க ஓ.பி.எஸ் குடும்பம் தடையாக இருக்கக் கூடாது. முறையாக நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.''

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

``முத்தலாக் விவகாரத்தில் இரண்டுவிதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் அ.தி.மு.க-வில் உள்ள இரட்டைத் தலைமையின் முரண்பாடான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது'' என்று கூறியுள்ளார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

டி.டி.வி.தினகரன் பேட்டி
டி.டி.வி.தினகரன் பேட்டி

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், ``மத்திய அரசின் ஏஜென்சி என்பது நடுநிலையோடு செயல்பட வேண்டும், அரசியல் தூண்டுதலில் செயல்படக் கூடாது. அ.தி.மு.க சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதிகள், திட்டங்களுக்கு செலவு செய்யாமல் திரும்ப அனுப்பப்படுவது தமிழக அரசின் மோசமான செயல்பாட்டைக் காட்டுகிறது. முத்தலாக் மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் இரட்டை நிலைப்பாட்டை சிறுபான்மை மக்கள் புரிந்துகொள்வார்கள், முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க இரு சபைகளில் முரண்பாடாக வெளிப்படுத்தியதன் மூலம் இரட்டைத் தலைமையின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

சிலைக் கடத்தல் விவகாரம் தொடர்பாக 6-ம் தேதிக்கு மேல் முடிவு தெரியும். முல்லைப் பெரியாறு அணையில் ஓ.பி.எஸ் குடும்பத்தினர் ஆதரவுடன் திருட்டு என்பது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. பெரியாறு அணையின் நீர் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்க ஓ.பி.எஸ் குடும்பம் தடையாக இருக்கக் கூடாது. முறையாக நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலூர் தொகுதியில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.