Published:Updated:

``திமுக-வை வீழ்த்த, கூட்டணிக்கு நேசக்கரம் நீட்டத் தயார்!'' - டி.டி.வி.தினகரன்

டி.டிவி.தினகரன்

``ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இருவரின் நடவடிக்கையும் மாறிவிடுகிறது." - டி.டி.வி.தினகரன்

``திமுக-வை வீழ்த்த, கூட்டணிக்கு நேசக்கரம் நீட்டத் தயார்!'' - டி.டி.வி.தினகரன்

``ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இருவரின் நடவடிக்கையும் மாறிவிடுகிறது." - டி.டி.வி.தினகரன்

Published:Updated:
டி.டிவி.தினகரன்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் தவறில்லை. அதில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள். தி.மு.க-வை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ```சென்னையில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டோம். மழை காரணமாக காலம் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்துவிட்டோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மழை காரணமாகப் பணிகளை முடிக்கவில்லை' என முதல்வர் உள்ளிட்டவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து, கண்முன்னே குழிதோண்டி வைக்கப்பட்டிருக்கும்போது `80 முதல் 90 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன' எனப் பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லியிருக்கலாம். செய்ய முடிந்ததைச் சொல்லுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவிருப்பது தவறில்லை. அதில் தி.மு.க அரசியல் செய்தால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்துக்குள்ளானது. இதில் தி.மு.க அம்பலப்பட்டுப்போனது. அதேபோல் ராமஜெயம் விவகாரத்தில் அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பேரணி நீதிமன்ற உத்தரவுப்படி நடந்திருக்கிறது. வழக்கமாக எப்போதும் இந்தப் பேரணி நடைபெறும். அதனால் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை.

`ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ, அதுபோல்தான் கவர்னர் பதவியும்’ என்பது எங்களது கொள்கை. கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. அவர் ஓர் அதிகாரிதான். மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசைக் குறை கூறாமல் இழப்பீடு பெற்றுத் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

ஸ்டாலின் - எடப்பாடி
ஸ்டாலின் - எடப்பாடி

ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. இருவருமே ஆணவத்துடன், அதிகாரத்துடன் செயல்படுகின்றனர். ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இருவரின் நடவடிக்கையும் மாறிவிடுகிறது. சரியான நேரத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தி.மு.க-வை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட நான் தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்துகொள்வோம். எனவே, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணிவைக்க வேண்டும்'' என்றார்.