Published:Updated:

`மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும், பழனிசாமியும் ஒன்றுதான்!’ - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

``தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான் என வாக்காளர்களுக்குப் புரிய வைப்போம்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

`மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும், பழனிசாமியும் ஒன்றுதான்!’ - டிடிவி தினகரன்

``தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான் என வாக்காளர்களுக்குப் புரிய வைப்போம்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
டிடிவி தினகரன்

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, அமமுக, பாஜக ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், டிடிவி தினகரன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான் என வாக்காளர்களுக்குப் புரிய வைப்போம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி முத்திரை பதிப்போம். இந்த ஒன்பது மாதங்களில் தங்களது 10 ஆண்டுக் கால அதிகார பசியைத் தீர்த்துக் கொள்வதற்கான வேட்டையை திமுகவினர் எல்லா இடங்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு முதல் உதாரணம் தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் நடந்த மெகா ஊழல்.

ஸ்டாலின், எடப்பாடி
ஸ்டாலின், எடப்பாடி

பொய் மூட்டைகளோடும், பண மூட்டைகளோடும் வரும் ஸ்டாலின், பழனிசாமி கம்பெனி வேட்பாளர்களைப் புறக்கணித்து, எதற்கும் விலை போகாத, லட்சியத்திற்காகவும், மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகவும் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்கு "பிரஷர் குக்கர்" சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்குப் புரியவைப்போம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.