Published:Updated:

``சசிகலா பாதை வேறு...என் பாதை வேறு!'' - டி.டி.வி.தினகரன்

``சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர். எனவே, அவருடைய பாதை வேறு, என்னுடைய பாதை வேறு. ஆனால், எங்களின் இலக்கு ஒன்றுதான்.'' - டி.டி.வி.தினகரன்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திவருகிறார்.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் முதல் நாளான இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அப்போது அவர், ``எடப்பாடி பழனிசாமி தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவரிடம் தடுமாற்றமும் பயமும் தெரிகின்றன. அம்மாவின் அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் அ.ம.மு.க. விரைவில் ஜனநாயகரீதியாகத் தேர்தலைச் சந்தித்து அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம். சசிகலா என் சித்தி என்பதால் `அ.ம.மு.க கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். அ.ம.மு.க கொடியைக் கையில் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்றெல்லாம் என்னால் கூற முடியாது. அவர் அ.தி.மு.க பொதுச்செயலாளர். எனவே, சசிகலாவின் பாதை வேறு, என்னுடைய பாதை வேறு. ஆனால், எங்களின் இலக்கு ஒன்றுதான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு