Published:Updated:

சசிகலா டிக் செய்த லிஸ்ட்... வெளியிடப்போகும் தினகரன்!

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

யார் யார்? நிர்வாகிகள் என்கிற பெயர்கள் அடங்கிய ஃபைலைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். சசிகலா ஓ.கே. சொன்னதும் இந்தப் பெயர்ப் பட்டியலை மீடியாக்களிடம் அறிவிக்கப்போகிறார் தினகரன்.

அ.ம.மு.க-விலிருந்து கட்சி நிர்வாகிகள் சிலர், மாற்றுக் கட்சிக்குத் தாண்டிவரும் நிலையில், அக்கட்சியின் பெயர்ப் பட்டியலை இன்று டி.டி.வி.தினகரன் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்காக, சசிகலாவைச் சந்திப்பதற்காக இன்று பெங்களூரு சென்றிருக்கிறார், தினகரன்.

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த இசக்கி சுப்பையா, தங்க தமிழ்ச்செல்வன்... உள்ளிட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகிய நிலையில், தினகரன் இன்று பெங்களூருவில் முகாமிட்டிருக்கிறார்.

வழக்கமாக 15 நாட்களுக்கு ஒருமுறை சிறைச்சாலையில் உள்ள சசிகலாவைச் சென்று சந்திப்பார். இந்த முறையும் அப்படித்தான் சென்றிருக்கிறார். அதோடு, கையில் முக்கியமான ஃபைல் ஒன்றையும் எடுத்துச் சென்றிருக்கிறார்.

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற தனிக் கட்சிக்கான மாநில, மாவட்ட அளவிலான அனைத்துப் பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. மத்தியத் தேர்தல் கமிஷனுக்கும் முறைப்படி இந்த விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை. யார் யார்? நிர்வாகிகள் என்கிற பெயர்கள் அடங்கிய ஃபைலைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். சசிகலா ஓ.கே. சொன்னதும் இந்தப் பெயர்ப் பட்டியலை மீடியாக்களிடம் அறிவிக்கப்போகிறார் தினகரன்.

"பதர்கள்தான் வெளியே சென்றிருக்கின்றன. விதைகள் இன்னும் இங்கேயேதான் இருக்கின்றன" என்று பெங்களூரு சிறைச்சாலை வாசலில் தனது ஆதரவாளர்களிடம் சொன்னாராம் தினகரன். ஆனால், அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமாரோ, "டி.டி.வி.தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம். சசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்வோம்" என்று மீடியாக்களிடம் பேசியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு