Published:Updated:

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை கசிந்தது எப்படி?” - அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், அரசிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை எப்படி கசிந்தது. ஆட்சியாளர்களே கசிய விட்டார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது?” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை கசிந்தது எப்படி?” - அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், அரசிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை எப்படி கசிந்தது. ஆட்சியாளர்களே கசிய விட்டார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது?” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Published:Updated:
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் விசாரணை ஆணையம், கடந்த 3 ஆண்டுகளில் 36 கட்டங்களாக விசாரணை நடத்தியது. இதில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 1,048 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. 4 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்ட 3,000 பக்கங்களுக்கும் மேற்பட்ட இதன் முழுமையான விசாரணை அறிக்கை, கடந்த மே 18-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒருநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் சில பகுதிகள் கடந்த 18-ம் தேதி கசிந்ததாக தகவல்கள் வெளியாகின.

முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை
முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை

அந்த அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அப்போதைய ஆட்சியர், தென் மண்டல காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட 17 பேருமே முழுப் பொறுப்பு. துப்பாக்கிச்சூடு நடத்திட முறையான அனுமதியோ, வரைமுறையோ பின்பற்றப்படவில்லை என்பது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்திகள் பல்வேறு ஊடங்களிலும் வெளியாகின. இந்த நிலையில், விசாரணை அறிக்கையை முழுமையாக பொது மக்கள் மத்தியில் தமிழக அரசு வெளியிட வேண்டுமென சி.பி.எம். நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுதிபதி, ``ஒருநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளின் மீது அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது.

ரகுபதி - தமிழக சட்டத்துறை அமைச்சர்
ரகுபதி - தமிழக சட்டத்துறை அமைச்சர்

சம்மந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையும் சட்டப்பேரவையில் வைக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தமிழக அரசிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை எப்படி கசிந்தது. ஆட்சியாளர்களே கசிய விட்டார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது?” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே இன்று நிர்வாகத் திறமையற்ற ஒரு மாநில அரசு உண்டு என்றால், அது தற்போது தமிழ்நாட்டில் உள்ள விடியா திமுக அரசாகும். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பள்ளி கல்லூரி மாணவர்களின் மர்ம மரணங்கள் போன்றவை கடந்த 15 மாத திமுக ஆட்சியில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல், தமிழகம் சீரழிந்து போன நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் கண்டு கொதிப்படைந்து போய் உள்ள மக்களை திசை திருப்ப, அருணா ஜெகதீசன் ஆணைத்தின் அறிக்கை வெளியீடு என்ற ஒரு நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பிட, கடந்த 2018-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசுதான் ஆணையம் அமைத்தது.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

அதே நேரத்தில், ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீலிடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. இந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அரசும் இதுவரை வெளியிடவில்லை. முதலில் ஒரு ஆங்கில ஏட்டில் வெளியானதாக சொல்கிறார்கள். ஆட்சியாளர்களே அறிக்கையை கசியவிட்டார்களா அல்லது ரகசியத்தைக் காக்க முடியாத அரசின் கையாலாகாத்தனமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.