Published:Updated:

விவசாயிகள் போராட்டம்: ட்விட்டர் Vs மத்திய அரசு... என்ன நடக்கிறது?

ட்விட்டர் - விவசாயிகள் போராட்டம்

`இந்தியச் சட்டத்தின் கீழ் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது என்று நாங்கள் நம்புகிறோம். ட்விட்டர் பயனாளர்கள் சுதந்திரமாகக் கருத்துகளைப் பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம்’ - ட்விட்டர்.

விவசாயிகள் போராட்டம்: ட்விட்டர் Vs மத்திய அரசு... என்ன நடக்கிறது?

`இந்தியச் சட்டத்தின் கீழ் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது என்று நாங்கள் நம்புகிறோம். ட்விட்டர் பயனாளர்கள் சுதந்திரமாகக் கருத்துகளைப் பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம்’ - ட்விட்டர்.

Published:Updated:
ட்விட்டர் - விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தை அடுத்து இந்தப் போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தப் போராட்டம் தொடர்பாகப் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறாகக் கருத்துகளைப் பதிவு செய்தவர்களின் ட்விட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தியது. அதையடுத்து சிலரின் பக்கங்களை ட்விட்டர் நீக்கியது, அவர்களின் தரப்பில் சரியான விளக்கம் கொடுத்ததை அடுத்து அவர்களின் பக்கங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயல்பாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு 1,178 நபர்களின் கணக்குகளை முடக்க வலியுறுத்தியது. இந்த 1,178 நபர்களும் பாகிஸ்தான், தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும், தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றும் அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த 1,178 நபர்களில் 500 நபர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. மேலும், இது குறித்து அந்த நிறுவனம் விளக்கமும் அளித்திருக்கிறது.

``ட்விட்டரில் வெளிப்படைத்தன்மையே ஆரோக்கியமான பொது உரையாடலை ஊக்குவிப்பதற்கும், நம்பிக்கையைப் பெறுவதற்கும் அடித்தளம் என்று நாங்கள் நம்புகிறோம். உலகிலுள்ள அரசாங்கங்களோடு நாங்கள் எப்படிச் செயல்படுகிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். இதன் விளைவுகள் மற்றும் முடிவுகள் குறித்து நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து, இந்தியாவில் எங்கள் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும், எங்கள் விதிகளை அமல்படுத்துவதற்கும், நாங்கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

அவதூறு, வன்முறையைப் போற்றுதல், வன்முறைச் சம்பவங்களைத் தூண்டும் வகையிலான பதிவுகள் மூலம் ட்விட்டர் விதிகளை மீறிய நூற்றுக்கணக்கான கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற விதிமீறலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை இடைநீக்கம் செய்திருக்கிறோம். இந்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப சில கணக்குகளை முடக்கியிருக்கிறோம். இந்தக் கணக்குகள் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றன. மற்ற நாடுகளில் அது செயலில் இருக்கும். ஏனென்றால், நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இந்தியச் சட்டத்துடன் ஒத்துப்போகின்றன என்று நாங்கள் நம்பவில்லை.

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப, செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கணக்குகளின் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படிச் செய்வது, இந்தியச் சட்டத்தின் கீழ் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது என்று நாங்கள் நம்புகிறோம். ட்விட்டர் பயனாளர்கள் சுதந்திரமாகக் கருத்துகளைப் பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம்.

ஜேக் டோர்சி (Jack Dorsey)
ஜேக் டோர்சி (Jack Dorsey)
AP

சட்டவிரோதமான கருத்துகள் பதிவிடுவதாக சட்டரீதியாகப் புகார் வந்தால், அந்த ட்வீட் குறித்து விசாரணை நடத்தப்படும். அந்த ட்வீட், ட்விட்டர் விதிமுறைகளுக்கும், அந்த நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கும் கீழ் இருக்கிறதா என்று ஆராய்வோம். அந்த ட்வீட், ட்விட்டர் நிறுவனத்தின் விதியை மீறியிருந்தால், அந்த ட்வீட் உடனடியாக நீக்கப்படும். அதேபோல, அந்த நாட்டின் சட்டத்தை மட்டும் மீறியிருந்தால், அந்த நாட்டில் மட்டும் அந்த ட்வீட் நிறுத்திவைக்கப்படும். பிப்ரவரி 10, 2021 அன்று நாங்கள் எங்களின் நடவடிக்கைகள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தெரிவித்திருக்கிறோம். இது குறித்து தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று ட்விட்டர் விளக்கம் கொடுத்திருக்கிறது.