Published:Updated:

கொடநாடு: சயானிடம் 2 மணி நேரம்; சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் 2 நாள்கள்! - விசாரணையில் நடந்தது என்ன?

முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் இரண்டு மணி நேரம் மட்டுமே ரகசிய வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் 8, 9-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் இரண்டு நாள்கள் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 23 -ம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று, பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரைக் கொலை செய்துவிட்டு, சில பொருள்களைத் திருடிச் சென்றது. அடுத்தடுத்த பரபரப்பு திருப்பங்களுடன் ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை, தற்போது சூடுபிடித்திருக்கிறது.

கொட்டும் மழையில் கடந்த மாதம் 17-ம் தேதி ஊட்டியில் தொடங்கப்பட்ட கொடநாடு வழக்கின் கூடுதல் விசாரணை ஒரு மாதத்தைக் கடந்தும் ஓயாமல் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, கனகராஜின் மரணத்துக்குப் பிறகு முதன்மைக் குற்றவாளியாகக் காவல்துறையால் சேர்க்கப்பட்டுள்ள சயானின் இரண்டு மணி நேர பரபரப்பு ரகசிய வாக்குமூலம் ஏற்படுத்திய களேபரத்தோடு தொடங்கிய கூடுதல் புலன்விசாரணையில் சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

கூடுதல் விசாரணை என்ற பெயரில் கிட்டத்தட்ட மறுவிசாரணையைப்போல தனிப்படையினரால் நடத்தப்பட்டுவரும் இந்த புலன்விசாரணையின் போக்கைக் கண்டு அதிமுக-வின் முக்கியப் புள்ளிகள் முதல் அப்போது கோத்தகிரி ஸ்டேஷனில் இருந்த கடைநிலை ஊழியர்கள் வரை பலரும் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்து அதன் விசாரணை நடைபெற்றுவரும் இரண்டாவது மாதத்தில் கொடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார். தினேஷின் தற்கொலை பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் கிளப்பினாலும், சாதாரண தற்கொலை வழக்காகவே அப்போது சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கையும் தற்போது மறுவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

இதைத் தொடர்ந்து 8, 9-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகிய இருவரையும் கேரளாவில் இருந்து வரவழைத்து ஊட்டியில் நேற்று முன்தினம் 10 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இரண்டாவது நாளாக நேற்றும் அவர்களிடம் ஐந்து மணி நேரத்துக்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். பிஜின்குட்டி, சதீஷன் இருவரிடமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`எடப்பாடியின் அரசு பங்களா’ முதல் ‘கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்குப் பொறி’ வரை! கழுகார் அப்டேட்ஸ்

இவர்களிடம் இரண்டு நாளாக விசாரணை நடத்தப்பட்டதன் பின்னணி குறித்துப் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், ``மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி, நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை அறிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

கொலை, கொள்ளைச் சம்பவம் நடத்தப்பட்டவிதம் குறித்து முழுமையாகத் தகவல் பெறப்பட்டுள்ளது. அதனாலேயே அவர்களிடம் இரண்டு நாள்கள் விசாரணை தேவைப்பட்டது. சில முக்கியத் தகவல்களும் பெறப்பட்டுள்ளன. அடுத்த நபர்களிடமும் விசாரணை தொடரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு