Published:Updated:

“துணை முதலமைச்சர் போல் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்!” – திருச்சியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - உதயநிதி ஸ்டாலின் ( DIXITH )

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, ‘உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ என பலமுறை மேடைகளில் பேசியும், கட்சிக் கூட்டங்களில் தீர்மானங்கள் இயற்றியும் வந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

“துணை முதலமைச்சர் போல் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்!” – திருச்சியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது, ‘உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ என பலமுறை மேடைகளில் பேசியும், கட்சிக் கூட்டங்களில் தீர்மானங்கள் இயற்றியும் வந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Published:Updated:
அன்பில் மகேஸ் பொய்யாமொழி - உதயநிதி ஸ்டாலின் ( DIXITH )

திருச்சி மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முதலாவதாக திருச்சி அண்ணா விளையாட்டரங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
DIXITH

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “கடந்த கால ஆட்சியில் சீர்கெட்டுப் போயிருந்த நிதி நிலையை சரிசெய்கின்ற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, இன்றைக்கு அதில் முன்னேற்றத்தைக் கண்டு கொண்டிருக்கின்றார் நம்முடைய முதலமைச்சர். `கூடுதல் செலவினம் வந்தாலும் பரவாயில்லை, மக்களுடைய மகிழ்ச்சிதான் என் வாழ்க்கையினுடைய எழுச்சி' என்று சொல்லி பொங்கலுக்கு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்ற இனிப்பான அறிவிப்பை வெளியிட்டியிருக்கிறார். எங்களுக்கு இன்றைக்கே புத்தாண்டு தொடங்கிவிட்டது. புத்தாண்டு பரிசாக திருச்சி மாவட்டத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறீர்கள். என்னதான் சென்னையில் உங்களுக்கு அலுவல் கோட்டை இருக்கிறது என்று சொன்னாலும், உங்களுக்கான அன்புக் கோட்டை, கழகக்கோட்டை அது திருச்சி மலைக்கோட்டைதான். அந்த மலைக்கோட்டையை தமிழகத்தின் முதன்மைக் கோட்டையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் எங்களுடைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் அவர்கள்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
DIXITH

இயக்கத்தினுடைய பொறுப்பை ஒரு கண்ணாகவும், ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை  மட்டுமல்லாமல், சிறப்பு அமலாக்கத் துறையையும் நீ கையாள வேண்டும்’ என்ற உங்களுடைய உத்தரவை ஏற்று அதனை தன்னுடைய மறு கண்ணாகவும் நினைத்து, தன்னுடைய தொலைநோக்குப் பார்வை மூலமாக இந்த இரு கண்களையும் வெற்றிகரமாக்க ஆற்றல் படைத்திருக்கக் கூடியவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் மட்டும் கிடையாது. சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை அமைச்சரும்கூட. கிட்டத்தட்ட துணை முதலமைச்சருக்கு நிகரான பொறுப்பைக் கையாண்டு கொண்டிருக்கிறார்” என்றார்.