Published:Updated:

மகாராஷ்டிரா: ``முடிந்தால் உடனே தேர்தலை நடத்துங்கள்..!" - உத்தவ் தாக்கரே சவால்

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உடனே தேர்தல் நடத்தவேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா: ``முடிந்தால் உடனே தேர்தலை நடத்துங்கள்..!" - உத்தவ் தாக்கரே சவால்

மகாராஷ்டிராவில் உடனே தேர்தல் நடத்தவேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராக பதவியேற்றிருக்கிறார். தற்போது யாரது அணி உண்மையான சிவசேனா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இப்பிரச்னைக்கு பிறகு உத்தவ் தாக்கரே முதன்முறையாக அளித்தப் பேட்டியில், ``தைரியம் இருந்தால் உடனே தேர்தலை நடத்துங்கள். நாங்கள் செய்தது தவறு என்றால் எங்களை மக்கள் வீட்டிற்கு அனுப்பட்டும். இப்போது நீங்கள் செய்ததை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். தற்போது ஏற்பட்டிருப்பது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

வில் அம்பு சின்னத்தை சிவசேனாவிடமிருந்து யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. வில் அம்பு சின்னத்தை மட்டும் மக்கள் பார்க்கவில்லை. அதனை யார் வைத்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கின்றனர். பா.ஜ.க கடந்த இரண்டரை ஆண்டுகளில் என்னையும், என் குடும்பத்தையும் திட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு அமைதியாகத்தானே இருந்தீர்கள். நீங்கள் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருந்துகொண்டு சொந்தக்கட்சிக்கே துரோகம் செய்து இருந்திருக்கிறீர்கள். சிலர் நாங்கள் அழைத்தால் மாதோஸ்ரீ வருவதாக சொல்கிறார்கள். எங்கள்மீது மரியாதை வைத்திருப்பதாக கூறுகிறார்கள். நீங்கள் அப்படி என்னிடம் வந்து பேசுவதாக இருந்தால் உங்களுக்கு இந்த சுற்றுப்பயணமே தேவைப்பட்டிருக்காது. இப்போது என் குடும்பத்தை திட்டியவர்களுடன் இருக்கிறீர்கள். நமது மரியாதைமீது தாக்குதல் நடத்துவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

எனவே உங்களது அன்பும் மரியாதையும் உண்மையானதுதானா என்பதை முடிவு செய்யுங்கள். அச்சுறுத்தலையும் மீறி இன்னும் எங்களுடன் 16 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை சிவசேனாவின் எதிர்காலத்தை மட்டுமல்லாது நாட்டின் எதிர்கால ஜனநாயகத்தையும் முடிவு செய்ய இருக்கிறது. நாங்கள் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை பற்றி கவலைப்படுகிறோம்.

நாங்கள் நீதித்துறையின்மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நீதித்துறை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கின்றனர். சுப்ரீம் கோர்ட் எடுக்கும் முடிவை பற்றி நான் கவலைப்படவில்லை. சட்டம் தனது கடமையை செய்யும். யாரும் சிவசேனாவை எடுத்துக்கொள்ள முடியாது. எம்.எல்.ஏ-க்கள் சென்றுவிட்டால் சிவசேனாவை அழித்து விடுவீர்களா? அவர்கள் பயத்தை உண்டாக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நாம் பனிந்துவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.