Published:Updated:

`ஜனநாயகத்தைக் கொன்று, ஷிண்டே வெற்றிபெற்றிருக்கிறார்!' - பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் தாக்கரே!

உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டே ஜனநாயகத்தைக் கொலைசெய்துவிட்டு வெற்றி பெற்றிருப்பதாக, உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

`ஜனநாயகத்தைக் கொன்று, ஷிண்டே வெற்றிபெற்றிருக்கிறார்!' - பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் தாக்கரே!

ஏக்நாத் ஷிண்டே ஜனநாயகத்தைக் கொலைசெய்துவிட்டு வெற்றி பெற்றிருப்பதாக, உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 16 பேரின் பதவியைப் பறிப்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று காலையில் வழங்கிய தீர்ப்பு உத்தவ் தாக்கரேவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. அதே சமயம் தார்மீக அடிப்படையில் அவருக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், அவரை மீண்டும் முதல்வராக்கியிருப்போம் என்ற ரீதியில் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஷிண்டே - உத்தவ்
ஷிண்டே - உத்தவ்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் உத்தவ் தாக்கரே, ``ஜனநாயகத்தைக் கொலைசெய்துவிட்டு ஏக்நாத் ஷிண்டே முதல்வராகியிருக்கிறார். எனவே, நான் செய்ததுபோல் ஷிண்டேயும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நான் எனக்காகப் போராடவில்லை. மாநில மற்றும் நாட்டு மக்களுக்காகப் போராடுகிறேன். ஷிண்டே அரசு சட்டபூர்வமானது கிடையாது. அது பதவியில் தொடர உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் வரவேற்றிருக்கிறார். இது நியாயமான தீர்ப்பு என்றும் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இது குறித்துப் பேசுகையில், ``ஆளுநர் சூழ்நிலைக்குத் தக்கபடி செயல்பட்டிருக்கிறார். மகாராஷ்டிரா ஆளுநரைப் பற்றி சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது என்று சொல்ல வரவில்லை. உண்மை வென்றிருக்கிறது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை முக்கியம். சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாரும் இல்லை. நாங்கள் சட்டத்துக்குட்பட்டு ஆட்சியமைத்தோம். அதை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ``மகாவிகாஷ் அகாடியின் சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் அரசுமீது இனி யாரும் சந்தேகப்பட முடியாது. இது முற்றிலும் சட்டபூர்வமான அரசாகும். அறநெறி குறித்துப் பேசுவது உத்தவ் தாக்கரேவுக்குப் பொருந்தாது. முதல்வர் பதவிக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் செல்லும்போது உத்தவ் தாக்கரே அறநெறியை மறந்துபோனாரா... அவருடன் இருந்தவர்கள் அவரைவிட்டுச் சென்றதால் பயத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்" என்று தெரிவித்தார்.