Published:Updated:

``என்னைப் புறமுதுகில் குத்தியது போல, மும்பையின் புறமுதுகில் குத்தாதீர்கள்!" - பாஜக-வைச் சாடிய உத்தவ்

உத்தவ் தாக்கரே

``மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்ன சொல்லைக் காப்பாற்றியிருந்தால், இந்நேரம் மகாராஷ்டிராவில் பா.ஜ.க முதல்வர் இருந்திருப்பார்." - உத்தவ் தாக்கரே

``என்னைப் புறமுதுகில் குத்தியது போல, மும்பையின் புறமுதுகில் குத்தாதீர்கள்!" - பாஜக-வைச் சாடிய உத்தவ்

``மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்ன சொல்லைக் காப்பாற்றியிருந்தால், இந்நேரம் மகாராஷ்டிராவில் பா.ஜ.க முதல்வர் இருந்திருப்பார்." - உத்தவ் தாக்கரே

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பா.ஜ.க, முதல்வர் பதவியை தன் வசம் வைத்துக்கொள்ளாமல் சிவசேனா அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவிடம் விட்டுக்கொடுத்திருக்கிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு மற்றும் ஆட்சி இழப்புகுப் பிறகு முதன்முறையாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டியளித்தார். ``மத்திய அமைச்சர் அமித் ஷா 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கூட்டணி தொடர்பாக என்னிடம் பேசியபோது, முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். அமித் ஷா சொன்னபடி நடந்து கொண்டிருந்தால் மகாராஷ்டிராவில் இப்போது பா.ஜ.க முதல்வர் இருந்திருப்பார்.

உத்தவ்தாக்கரே
உத்தவ்தாக்கரே

இப்போது வெளியில் உள்ள ஒருவருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நீங்கள், 2019-ம் ஆண்டு அது போன்று நடந்து கொள்ளவில்லை. இப்போது முதல்வர் பதவி கிடைக்காத நிலையில் பா.ஜ.க-வுக்கு என்ன மகிழ்ச்சி கிடைத்தது என்று எனக்குப் புரியவில்லை. எனக்கு துரோகம் செய்தது போல் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னை புறமுதுகில் குத்தியது போல் மும்பையின் புறமுதுகில் குத்தாதீர்கள். மெட்ரோ ரயில் கார்ஷெட்டிற்கான இடத்தை காஞ்சூர்மார்க்கிலிருந்து ஆரே காலனிக்கு மாற்றுவது சரியல்ல. மும்பையின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

அமித் ஷா
அமித் ஷா

முன்னதாக உத்தவ் தாக்கரே நேற்று சேனா பவனில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே நேற்று இரவு பதவியேற்றவுடன் முதல் காரியமாக மும்பை மூன்றாவது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கார்ஷெட்டை கோரேகாவ் ஆரே காலனிக்கு மாற்ற உத்தரவிட்டார். இது தொடர்பாக அரசு வழக்கறிஞரிடம் சொல்லி மும்பை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். கார்ஷெட் பிரச்னையால் இந்த மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை முடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்கிடையே பா.ஜ.க-வின் ராகுல் நர்வேகர் மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.