Published:Updated:

``உதயநிதி `பெரியார்'... அன்பில் `கருப்புசாமி' ” - நூல் வெளியீட்டு விழாவில் இராஜீவ் காந்தி பேச்சு

தமிழன் வழிபாடு - நூல் வெளியீட்டு விழா

உதயநிதி ரசிகர் மன்றப் பொருளாளரும், இளைஞரணி நிர்வாகியுமான ராஜா தமிழ் மாறன் எழுதிய `தமிழன் வழிபாடு' என்ற நூலின் வெளியீட்டு விழா, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.

``உதயநிதி `பெரியார்'... அன்பில் `கருப்புசாமி' ” - நூல் வெளியீட்டு விழாவில் இராஜீவ் காந்தி பேச்சு

உதயநிதி ரசிகர் மன்றப் பொருளாளரும், இளைஞரணி நிர்வாகியுமான ராஜா தமிழ் மாறன் எழுதிய `தமிழன் வழிபாடு' என்ற நூலின் வெளியீட்டு விழா, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.

Published:Updated:
தமிழன் வழிபாடு - நூல் வெளியீட்டு விழா

உதயநிதி ரசிகர் மன்றப் பொருளாளரும், இளைஞரணி நிர்வாகியுமான ராஜா தமிழ் மாறன் எழுதிய `தமிழன் வழிபாடு' என்ற நூலின் வெளியீட்டு விழா, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் நடைபெற்றது. நூலை அமைச்சர் அன்பில் வெளியிட, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பெற்றுக்கொள்வதாக இருந்தது. ஆனால், அமைச்சர் சேகர் பாபு வருவதற்குத் தாமதமானதால் மா.சுப்பிரமணியனையும், சிவசங்கரையும் வைத்து நூல் வெளியீட்டு விழாவைத் தொடங்கிவிட்டனர். நூலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட, சற்றே தாமதமாக மேடைக்கு வந்த அமைச்சர் சேகர் பாபு அதை பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அமைச்சர்கள், `தமிழன் வழிபாடு’ - நூல் வெளியீட்டு விழா
தமிழ்நாடு அமைச்சர்கள், `தமிழன் வழிபாடு’ - நூல் வெளியீட்டு விழா

நூலை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருணாநிதியையும், உதயநிதியையும், அன்பிலையும் பற்றிப் பேசிவிட்டு அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி, ``பெருந்தெய்வங்களோடு பேச சாதி தேவைப்பட்டது, பூநூல் தேவைப்பட்டது, மந்திரங்கள் தேவைப்பட்டன. ஆனால் கொட்டடித்து, குலவையிட்டு நம் குலதெய்வத்துடன் பேச முடியும். நம் குலதெய்வ வழிபாட்டை இதுதான் என்று கூறி பாதுகாத்தவர் பெரியார்.

பெரியார் இல்லை என்றால் அய்யனாரும், கருப்பசாமியும், காளியும், கொற்றவையும் இன்று இருக்க மாட்டார்கள். தி.மு.க எந்த மதத்துக்கும், வழிபாட்டுக்கும் எதிரியில்லை. இந்த மேடையிலேயே கடவுள் நம்பிக்கையற்ற பெரியாரியச் சிந்தனையாளர்களும், கடவுள் நம்பிக்கையுடைய அமைச்சர் சேகர் பாபுவும் இருக்கிறார்கள்” எனச் சொன்னதும் சேகர் பாபு, சிவசங்கரைக் கையெடுத்துக் கும்பிட்டதும்... அரங்கில் இருந்தவர்கள் கைதட்டவும் சரியாக இருந்தது.

தொடர்ந்து பேசிய இராஜீவ் காந்தி, ``பண்பாட்டு மரபுகளைக் காப்பாற்ற கருப்பசாமியாக அன்பில் மகேஸும், பெரியாராக சின்னவரும் இருக்கிறார்கள்” எனக் கூறி முடித்தார்.

அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சிவசங்கர்
அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர் பேசியபோது, ``நூலைப் படித்துப் பார்த்தேன். நூல் வெளியீட்டு விழாவில் என்னுடைய பெயர் இல்லையென்றாலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் வந்தேன்” என்றவர், தனது பழைய முகநூல் கதைகளைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாகப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ``தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட பெயர்களை மீண்டும் தமிழ்ப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற, துறை அமைச்சரிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

எங்கெல்லாம் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதோ, அது குறித்த தகவல்களைத் தாருங்கள்" என்றவர், ``முதல்வருக்கு ஒரு நூல் பரிசளிப்பதாக இருக்கிறேன். அது இந்த நூலாகத்தான் இருக்கும்” எனச் சொன்னதும் நூலாசிரியரும் பதிப்பாளரும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தனர்.