Published:Updated:

``நல்ல நடிகனாக வருவதே என் நோக்கம்!'' 5 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி சொன்னதும் வாரிசு அரசியலும்!

உதயநிதி

உதயநிதி ஸ்டாலினின் நோக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் மாறியிருப்பது, மிகப்பெரும் விமர்சனத்திற்கு உட்பட்டது இல்லை. ஆனால், `குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என ஏற்கெனவே தி.மு.கவின் மீது இருக்கும் முத்திரை மீண்டும் வலுப்பெறும் ஒரு சம்பவமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.

``நல்ல நடிகனாக வருவதே என் நோக்கம்!'' 5 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி சொன்னதும் வாரிசு அரசியலும்!

உதயநிதி ஸ்டாலினின் நோக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் மாறியிருப்பது, மிகப்பெரும் விமர்சனத்திற்கு உட்பட்டது இல்லை. ஆனால், `குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என ஏற்கெனவே தி.மு.கவின் மீது இருக்கும் முத்திரை மீண்டும் வலுப்பெறும் ஒரு சம்பவமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.

Published:Updated:
உதயநிதி
``எனக்கு அரசியலில் எப்போதும் ஈடுபாடு இருந்தது கிடையாது. சொல்லப்போனால் எனக்கு அரசியலே வேண்டாம். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்!"
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி
உதயநிதி

ஐந்து வருடங்களுக்கு முன்பு `நண்பேன்டா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் சொன்ன கருத்து இது. கலைத்துறைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் குணத்துடன் அன்று பேசிய உதயநிதி, தற்போது தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உதயநிதி ஸ்டாலினின் நோக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் மாறியிருப்பது, மிகப்பெரும் விமர்சனத்திற்கு உட்பட்டது இல்லை. ஆனால், `குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என ஏற்கெனவே தி.மு.கவின் மீது இருக்கும் முத்திரை மீண்டும் வலுப்பெறும் ஒரு சம்பவமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது!

உதயநிதி
உதயநிதி

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் உதயநிதியின் பயணம், திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்செயலா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், இந்தப் பயணத்தின் உச்சம் என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது. `உதயநிதிக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொறுப்பு தி.மு.கவின் அடுத்த முதல்வர் பதவிக்கான அச்சாரமாகக்கூட இருக்கலாம்' எனக் கணித்தால், அது தவறான கணிப்பாக இருக்காது. அதுவே தமிழக அரசியல் வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். உதயநிதிக்கு கிடைத்திருக்கும் பதவி, தி.மு.கவிலேயேகூட சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாகத்தான் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புலம்பலாகவே புகைந்து கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடும்ப அரசியல் என்பதை தி.மு.க மட்டும் செய்யவில்லை. இந்திய அளவில், ஏன் உலக அளவில்கூட தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அடுத்தடுத்து பதவியில் உட்கார வைப்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் முறை மன்னராட்சி காலத்தில் இருப்பதுதான். தற்போது ஜனநாயகம் என்று கூறிக் கொண்டாலும் இன்றைய காலத்திலும் அது தொடரவே செய்கிறது. இந்தப் போக்கு நியாயமானதா, இல்லையா என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஆனால், உடனடியாக நாம் எழுப்ப வேண்டிய கேள்வி குடும்பப் பின்னணியை அடிப்படையாக வைத்து, பதவியில் உட்காரும் அந்த இளம் வாரிசு, குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியானவர்தானா, அந்தப் பதவிக்கு உரிய அரசியல் தெளிவும், களப்பணியும் அவரிடம் இருக்கிறதா என்பதுதான். இந்தக் கேள்விகளுடன்தான் உதயநிதியை நாம் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சோ ராமசாமி
சோ ராமசாமி

கருணாநிதியின் மறைவுக்குப் பின் தற்போது தி.மு.க தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.கவில் முந்தைய காலங்களில் அடுத்தடுத்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டபோது, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இது மிகப்பெரிய அளவில் விமர்சனமாக வைக்கப்படவில்லை. தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்த துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி கூட `தி.மு.கவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வரலாம்' என்று கூறியிருந்தார். அதற்கு சோ முன்வைத்த காரணம், ஸ்டாலினின் தொடர் அரசியல் செயல்பாடுகள்.

மிசா காலத்தில் சிறை சென்றதிலிருந்து, தற்போதுவரை அவருடைய அரசியல் களப்பயணம் மிக நீண்டது. தற்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால், இயல்பாகவே அவர் தற்போது வகிக்கும் இடத்திற்குத் தகுதியானவராக மாறுகிறார்.

உதயநிதி
உதயநிதி

ஆனால், உதயநிதி...?! திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததற்கும், அரசியலில் இறங்கியதற்குமான இடைவெளி எவ்வளவு காலம் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் சமயத்தில் தாத்தா கருணாநிதிக்காகவும், அப்பா ஸ்டாலின் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்காகவும் சுற்றுப்பயணம் சென்று தி.மு.கவுக்காக பிரசாரம் செய்ததை மட்டும் வைத்துக் கொண்டு, அவருக்கு வெகுசீக்கிரமே கட்சியின் மிக முக்கியப் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். அல்லது மிகப்பெரிய பதவியைக் கொடுப்பதற்கு முன்னோட்டமாக உதயநிதியை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள் எனலாம்.

எது எப்படியோ, ஆண்டாண்டு காலமாக தி.மு.கவிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஓர் உடன்பிறப்பு வந்தடைய வேண்டிய இடத்தை வாரிசு என்பதாலேயே உதயநிதி அடைகிறார் என்பது கட்சியினருக்கு எந்தளவுக்கு மிகப்பெரிய சோர்வைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் இருப்பது இன்னும் சோகம்.

தி.மு.க தலைவராக இருந்து மறைந்த கருணாநிதியிடம் குடும்ப அரசியல் பற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதற்கு கருணாநிதி..

கருணாநிதி
கருணாநிதி
"குடும்பம் என ஒன்று இருந்தால் அரசியல் செய்வார்கள்தான்" என்றார்.

தற்போதைய தி.மு.க தலைமையும் இதே பதிலைத்தான் சொல்லும் என்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism