சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கோவை வந்தார். மாணவிகள், பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதயநிதி பேசியதாவது, ``உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு, கோவையில் நடந்த முகவர்கள் கூட்டத்தில்,


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற மாட்டாங்க. நான் நம்பவே மாட்டேன்.’ என சொன்னேன். அப்படி சொன்னதை இப்ப வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். மிகப்பெரிய வெற்றியை கிடைத்துள்ளது. கோவை மக்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கு முக்கியமானது. தேர்தல் வாக்குப்பதிவின்போது கூட தனது சொந்த ஊரான கரூருக்கு செல்லாமல், கோவையில்தான் இருந்தார். அதுகுறித்து நான் கேட்டபோது,

‘தலைவர் ஒப்படைத்த பணியை 100 சதவிகிதம் இல்லை.. 1,000 சதவிகிதம் உறுதி செய்துவிட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பேன்.’ என்றார். சொன்னதை செய்து காட்டியிருக்கிறார். இது தலைவரின் 10 மாத நல்லாட்சிக்கு கோவை மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின், எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திமுக ஐ.டி விங் இணை செயலாளர் மகேந்திரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.