Election bannerElection banner
Published:Updated:

`தாத்தா கருணாநிதிக்கு பிடித்தமான தொகுதி’ - சேப்பாக்கத்தைக் கைப்பற்றுகிறார் உதயநிதி

உதயநிதி
உதயநிதி

தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்துவந்த சேப்பாக்கம் தொகுதியில், திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு கடந்த 2011-ல் சட்டசபை தேர்தலில் புதிய தொகுதியாக உருவெடுத்தது.

வேட்பாளர் நேர்காணலில் பங்கெடுத்தாலும், வாரிசு அரசியல் குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காக இந்த தேர்தலில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட மாட்டார் என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தேர்தல்களம் திமுகவுக்கு சாதகமாக இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவில் உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிறுத்தப்பட்டார். இதனாலேயே இத்தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்டது.

உதயநிதி சந்தித்த முதல் தேர்தல் போட்டிக்களம் இதுதான். சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதாலும், தாத்தாவைப் போன்று தொடர்ந்து வெற்றி பெறுவார் என்ற சென்டிமென்டிலும் உதயநிதி இங்கே போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்துவந்த சேப்பாக்கம் தொகுதியில், திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு கடந்த 2011-ல்சட்டசபை தேர்தலில் புதிய தொகுதியாக உருவெடுத்தது. 2006 ஆம் ஆண்டு வரை சேப்பாக்கம் தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி என அழைக்கப்படுகிறது.

 `தாத்தா கருணாநிதிக்கு பிடித்தமான தொகுதி’ - சேப்பாக்கத்தைக் கைப்பற்றுகிறார் உதயநிதி

கடந்த 1977 முதல் 2011 வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் 8 முறை திமுகவும்,1991 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. அதன்பிறகு 2011, 2016-ல் தேர்தல்களில் திமுகவின் ஜெ.அன்பழகன் வென்றார். அவர் கடந்த 2016 தேர்தலில் 67,982 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆ.நூர்ஜகான் 53,818 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால் இந்த முறை இத்தொகுதியில் பாஜக சார்பில், நடிகை குஷ்பு களம் இறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தொகுதியை கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு விட்டுக்கொடுத்து விட்டது அதிமுக. அமமுக சார்பில் எல்.ராஜேந்திரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் முகம்மது இத்ரிஸ்மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மு.ஜெயசிம்மராஜா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

தொகுதி அறிவிப்பு வெளியானபோதே வெற்றி வாய்ப்பு உதயநிதிக்கு சாதகமாக இருக்கும் என்ன கூறப்பட்டது. இதற்கிடையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியபோதே முன்னிலையில் இருந்தார் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது அனைத்து சுற்றுகளின் எண்ணிக்கையிலும் உதயநிதி முன்னிலையே வகித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸாலியை சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். `தனது தாத்தா கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் தனது அரசியல் வெற்றிக் கணக்கைத் துவங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சட்ட சபைக்குள் நுழைய உள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு