Published:Updated:

`குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் என்னாச்சு?!' -பிரசாரத்தில் உதயநிதியிடம் கேட்கப்பட்ட கேள்வி

பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்

கரூர் வேலாயுதபாளையத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டத்தில் இருந்த ஒருவர், 'குடும்பத்தலைவிகளுக்கு தலா மாதம் ரூ. 1000 உதவித்தொகை தருவதாக சொன்னீர்களே, அது என்னாச்சு?' என்று கேட்டார்.

`குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் என்னாச்சு?!' -பிரசாரத்தில் உதயநிதியிடம் கேட்கப்பட்ட கேள்வி

கரூர் வேலாயுதபாளையத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டத்தில் இருந்த ஒருவர், 'குடும்பத்தலைவிகளுக்கு தலா மாதம் ரூ. 1000 உதவித்தொகை தருவதாக சொன்னீர்களே, அது என்னாச்சு?' என்று கேட்டார்.

Published:Updated:
பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்

``தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தில் முதலிடத்துக்கு கொண்டுவருவதே என் பணி எனக் கூறி நமது முதல்வர் மக்கள் பணியாற்றி வருகிறார். இதனை நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தியும் உறுதிபடுத்தும் வகையில், 'பாசிச பா.ஜ.க. சங்பரிவார சக்திகள் ஒருபோதும் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது' என சூளுரைத்து பேசியுள்ளார். அதற்கேற்தான் தமிழ்நாட்டின் நலனுக்காக இரவு, பகல் பாராது உழைக்கும் நமது முதல்வரும் தமிழர்களின் விரோத பாசிச சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றார்" என்று உதயநிதி ஸ்டாலின் கரூரில் விமர்சித்து பேசியுள்ளார்.

பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்
பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்

கரூர் மாநகராட்சி தேர்தல் களம், சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வாக்குகள் சேகரித்து பேசினார். இந்த பிரசார நிகழ்ச்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்பாடு செய்திருந்தார். பிரசாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்
பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்

"கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் துவங்கினேன். தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை எனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நேற்று துவங்கினேன். சென்னைக்கு வெளியே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தை துவங்கியுள்ளேன். கரூர் மாவட்டத்திற்கு தி.மு.கவுக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் தான் முதன்முதலில் தி.மு.க தலைவர் கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார்.

அப்படி, முதன் முதலாக கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் போட்டியிட்ட தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த மாவட்டத்தில், மகிழ்ச்சியோடு என்னை வரவேற்க வந்த உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சிக்கு வந்தவுடனேயே கொரோனா தொற்று பாதிப்பு, பெட் இல்லை. ஆக்ஸிஜன் இல்லை என்ற நிலை மாற்றப்பட்டது. கொரோனா நிதியாக ரூ.4 ஆயிரம், பெட்ரோல் விலை குறைப்பு, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்று பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற பெயரில் 2 ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை மேம்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

நம்மை காக்கும் திட்டம், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மின்சாரத்துறையில் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் சேவை மையம் என பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யும்விதமாக, சட்டப்போராட்டத்தில் நம் முதல்வர் தளபதியின் அரசு ஈடுபட்டுள்ளது.

பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்
பிரசாரம் செய்யும் உதயநிதி ஸ்டாலின்

'சொன்னது என்னாச்சு' என்று எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து கூறிவருகிறார். அதோடு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர், 'நீட் தேர்வு ரகசியம் உதயநிதிக்கு தெரியும்' என்று கூறியுள்ளார். இப்போது, இந்தக் கூட்டத்தில் நான் அந்த ரகசியத்தை தெரிவிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். தமிழகத்தில் உள்ள ஆளுநர் நினைப்பதைப் போல, இது அ.தி.மு.க அடிமை ஆட்சி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க ஆட்சி. தமிழகத்தில் சமூக நீதி காத்த கலைஞர் வழிவந்த ஸ்டாலின் ஆட்சி. நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி சட்டப் போராட்டத்தை மேற்கொள்வோம்.

நீட் விசயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் நீட்டை நீக்கும் வரை, போராடுவோம். எடப்பாடி அவர்களே, உங்கள் ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றரை ஆண்டு கிடப்பில் போட்டுவிட்டு, அது என்ன ஆச்சு என்று தெரியவில்லை' என மழுப்பலாக கூறி கடைசிவரை உண்மை நிலைமையை நீங்கள் சொல்லவே இல்லை. ஆனால், நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். கவர்னர் திருப்பி அனுப்பிய ஒரு வாரத்தில் மீண்டும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்.

நிச்சயம் தமிழ்நாட்டின் நலனுக்காக சொல்வதை செய்து முடிப்போம். அதிமுக, பா.ஜ.கவுக்கு, சிம்மசொப்பனமாக விளங்கிக்கொண்டிருப்பவர் நமது தலைவர். தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தில் முதலிடத்திற்க்கு கொண்டுவருவதே என் பணி எனக் கூறி நமது முதல்வர் மக்கள் பணியாற்றி வருகிறார். இதனை, நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தியும் உறுதிபடுத்தும் வகையில் பாசிச பா.ஜ.க. சங்பரிவார சக்திகள் ஒருபோதும் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என சூளுரைத்து பேசியுள்ளார். அதற்கேற்பதான், தமிழ்நாட்டின் நலனுக்காக இரவு, பகல் பாராது உழைக்கும் நமது முதல்வரும் பாசிச, தமிழர்களின் விரோத சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றார்.

துரை.வேம்பையன்
துரை.வேம்பையன்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தியுள்ளது. அதனால், மக்கள் அனைவரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க காத்திருக்கிறார்கள். எனவே, கழகத்தினரும், கூட்டணி கட்சியினரும், வீடுவீடாக நேரில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடப்பட்டு, மக்கள் நலம் பெற உள்ளாட்சியிலும் நம் ஆட்சியை மலரச் செய்து, மக்களுக்கு பணியாற்றச் செய்ய வேண்டும்" என்றார்.

அடுத்து, கரூர் வேலாயுதபாளையத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்றார். அப்போது, வாகனத்தை விட்டு இறங்கி ஒரு டீக்கடைக்கு சென்றார். அங்கு டீ குடித்தவர், அங்கிருந்தவர்களிடம் சகஜமாக பேசினார். அதன்பிறகு, அங்கே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், 'குடும்பத்தலைவிகளுக்கு தலா மாதம் ரூ. 1000 உதவித்தொகை தருவதாக சொன்னீர்களே, அது என்னாச்சு?' என்று கேட்க, 'கொடுத்திடலாம்' என்று கூறி சமாதானப்படுத்தினார்.