Published:Updated:

உதயாவுக்கு ‘நோ’... ஸ்டாலின் கறார்?

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

‘இம்முறை உதயநிதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பிரசாரம் மட்டுமே செய்யப்போகிறார்’ என்ற செய்தியால், பரபரத்துக் கிடக்கிறது தி.மு.க கூடாரம்.

உதயாவுக்கு ‘நோ’... ஸ்டாலின் கறார்?

‘இம்முறை உதயநிதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பிரசாரம் மட்டுமே செய்யப்போகிறார்’ என்ற செய்தியால், பரபரத்துக் கிடக்கிறது தி.மு.க கூடாரம்.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

‘‘உதயநிதி வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று ஒரு டீம் கடுமையாகச் சதிவலை பின்ன ஆரம்பித்திருக்கிறது’’ என்று கடந்த இதழில் கழுகார் கூறியிருந்தார். இந்தச் செய்திக்குப் பின்னால் தி.மு.க-விலும், ஸ்டாலின் குடும்பத்துக்குள்ளும் என்ன நடந்தது என்ற விசாரணையில் இறங்கினோம்...

‘இந்தச் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது உறுதி’ என்று தி.மு.க-வினர் சொல்லிவந்தனர். அதற்கேற்றாற்போல் உதயநிதி விருப்ப மனுவும் அளித்திருந்தார். இந்தநிலையில், ‘இம்முறை உதயநிதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பிரசாரம் மட்டுமே செய்யப்போகிறார்’ என்ற செய்தியால், பரபரத்துக் கிடக்கிறது தி.மு.க கூடாரம்.

உதயாவுக்கு ‘நோ’... ஸ்டாலின் கறார்?

இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி முடிவுசெய்ததே, சிறிய தொகுதி, சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன, எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்ற எண்ணத்தில்தான். ஆனால், சில நாள்களுக்கு முன்பு, ‘உதயநிதியை எப்படியாவது தோற்கடிக்க அ.தி.மு.க - பா.ஜ.க தரப்பு தீவிரமாக வேலை செய்கிறது’ என்று தி.மு.க தலைமைக்கு ஒரு தகவல் வந்தது. குஷ்புவை இந்தத் தொகுதியில் களமிறக்க பா.ஜ.க முடிவெடுத்ததே, குஷ்புவுக்கு இருக்கும் பாப்புலாரிட்டியையும், இஸ்லாமியர் வாக்குகளையும் குறிவைத்துத்தான். இந்தத் தகவலுக்குப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத தி.மு.க., மற்றொரு உட்கட்சி மற்றும் குடும்ப விவகாரத்தால் உதயா போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது.

உதயாவுக்கு ‘நோ’... ஸ்டாலின் கறார்?

அதாவது, இம்முறை கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்குமாக இரண்டு சீட் கொடுக்க முடியாது என்று ஆரம்பத்திலிருந்தே தி.மு.க தலைமை கறார் காட்டிவந்தது. தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலரும், தங்கள் வாரிசுகளைக் களத்தில் இறக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். தற்போது மாவட்டச் செயலாளர்களாக உள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு கே.என்.நேரு எனப் பலரின் வாரிசுகள் விருப்ப மனு அளித்திருந்தனர். இதுவொரு முக்கியப் பிரச்னையாக கட்சிக்குள் விஸ்வரூபமெடுத்தது. இரண்டு சீட்டுக்கே நோ சொன்ன தலைமை, ஒரு மாவட்டச் செயலாளரின் பேராசையைப் பார்த்துக் கிறுகிறுத்துப்போனது.

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் மொத்தம் ஐந்து தொகுதிகள் உள்ளன. அவற்றில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். அதே மாவட்டத்திலுள்ள சிதம்பரம் தொகுதியைத் தன் மகன் கதிரவனுக்கும், விருத்தாசலம் தொகுதியை சம்பந்தியான தங்க ஆனந்தனுக்கும், நெய்வேலி தொகுதியை தன் மனைவியின் தங்கை மருமகன் சிவக்குமாருக்கும் கேட்டு விருப்ப மனுவை கொடுக்கச் செய்திருக்கிறார் பன்னீர்செல்வம். ஒரு மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் நான்கு தொகுதிகளை ஒருவரின் குடும்பத்துக்கே கேட்டால் என்ன ஆவது என அதிர்ச்சியடைந்தது தலைமை.

உதயாவுக்கு ‘நோ’... ஸ்டாலின் கறார்?

மற்றொருபுறம், தங்கள் வாரிசுக்கு வாய்ப்பு கேட்கும் தி.மு.க நிர்வாகிகளோ... துரைமுருகன், டி.ஆர்.பாலு மூலம் ‘எங்கள் வாரிசுக்கு வாய்ப்பு வாங்கித் தாருங்கள்’ என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களோ, ‘எங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு வாங்கவே படாதபாடு பட்டோம். உங்களுக்காக நாங்கள் எப்படித் தலைவரிடம் பேச முடியும்’ என்று கையை விரித்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பாக நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளிடமிருந்து தகவல் ஒன்று ஸ்டாலின் காதுக்கு வந்தது. அதுதான் முக்கியமான திருப்பத்துக்குக் காரணம். `தங்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியிலிருக்கும் நிர்வாகிகள், ‘தலைவர் வீட்டுக்கு ஒரு நியாயம்... தொண்டர்களுக்கு ஒரு நியாயமா?’ என்ற விமர்சனத்தைக் கீழ்மட்டம் வரை எடுத்துச் சென்று, தேர்தல் நேரத்தில் தொண்டர்களை உற்சாகமிழக்கச் செய்கிறார்கள்’ என்றது அந்தத் தகவல்.

இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட ஸ்டாலின், இந்த வாரிசு அரசியல் விமர்சனத்துக்கும், வாரிசுகளுக்கு சீட் கேட்டு நச்சரிக்கும் நிர்வாகிகளின் டார்ச்சருக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யோசித்தார். `இம்முறை உதயநிதி தேர்தலில் போட்டியிட வேண்டாம். வேண்டுமானால், பிறகு மேயர் தேர்தலில் போட்டியிடச் செய்யலாம். பெரிய அளவில் வெற்றியும் கிடைக்கும்’ என்று யோசித்து குடும்பத்தோடு விவாதித்திருக்கிறார்.

உதயாவுக்கு ‘நோ’... ஸ்டாலின் கறார்?

‘ஐபேக் நிறுவனம் முழுமையாக சபரீசன் கட்டுப்பாட்டில் இருப்பதால், உதயநிதியைத் தேர்தல் களத்தில் நிற்கவிடாமல் அவர் தரப்பு சதி செய்கிறதோ?’ என்ற சந்தேகத்திலிருக்கும் குடும்பத்தின் ஒரு தரப்பு ‘இந்தத் தேர்தலில் உதயா நின்றால் எளிதாக ஜெயித்துவிடலாமே... ஏன் நிற்க வேண்டாம் என்கிறீர்கள்?’ என்று சந்தேகத்தோடு கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த விவாதம், ஸ்டாலினுக்கும் துர்கா ஸ்டாலினுக்குமாக மாறி, கடுமையாக நீண்டு நள்ளிரவு வரை தொடர்ந்திருக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளிவைக்க விரும்பிய உதயநிதி, ‘எனக்கு இந்தத் தேர்தலில் நிற்க வேண்டும்; ஜெயித்து அமைச்சராக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. நீங்கள் முதல்வராக வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இத்தனை நாள்களாகப் பிரசாரம் செய்து வருகிறேன். எனக்கு சீட் கொடுத்தால், மற்ற தலைவர்களின் வாரிசுகளுக்கும் சீட் கொடுக்க வேண்டிவரும். இது கட்சிக்கு நல்லதல்ல. அதனால், இம்முறை நான் தேர்தலில் நிற்க விரும்பவில்லை’ எனத் தெளிவாகச் சொன்னதோடு,

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தனது சாய்ஸாக மூவரின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி” என்றார்கள்.

வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளிவைத்து, தி.மு.க தலைமை நெஞ்சு நிமிர்த்துமா அல்லது கடைசி நேரத்தில் கொள்கை தளர்த்தி, தலைகுனியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism