Published:Updated:

14-ம் தேதி அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துவிட்டார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்ற செய்த வெளியான நாள்முதலே, ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப்போகிறார் எனப் பேச்சுக்கள் எழுந்தன.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதற்கு முன்னதாக ஏற்கெனவே இதுபோன்று பேச்சுக்கள் எழுந்திருந்தாலும், இந்த முறை உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சராவர் எனப் பேசப்பட்டது. உதயநிதிக்கு ஒதுக்கப்போகும் இலாகா பற்றிகூட பேச்சுக்கள் பரவின. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டிருக்கிறார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு
ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு

இது குறித்து ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வான உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துவிட்டார் என்றும், டிசம்பர் 14-ம் தேதியன்று காலை 9:30 மணியளவியில் ராஜ் பவனிலுள்ள தர்பார் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.