தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 2,000 மாணவர்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 14,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்வி பயின்றுவந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அந்த மாணவர்களால் அங்கு படிப்பைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, அங்கிருந்து மாணவர்களை அழைத்துவர மத்திய அரசும், மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டன.
தற்போது, இந்தியாவுக்குத் திரும்பிய மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். உக்ரைனில் போர் நீடிப்பதால் இப்போதைக்கு அங்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் ‘உக்ரைன் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் - பெற்றோர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பைத் தொடர உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அந்த அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மே 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது நம்மிடம் பேசிய மாணவர்கள், “போர் நீடிப்பதால், இப்போதைக்கு எங்களால் உக்ரைன் செல்ல முடியாது. எனவே, இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு எங்களுக்கு அனுமதி தர வேண்டும்” என்றனர். மாணவர்களின் பெற்றோர்கள் சிலரிடம் பேசியபோது, “உக்ரைனிலிருந்து எங்கள் பிள்ளைகளை பத்திரமாக அழைத்துவந்ததற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இவர்களுக்கான இடங்களை ஒதுக்கித்தர அரசு முன்வர வேண்டும்” என்று கூறினர்.